Tuesday 20 October 2020

மக்கள் ஆட்சி
இரவிச்சந்திரன்

Monday 19 March 2018

childrens sycology

குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.\r\n\r\nஅவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். \r\n\r\n\r\nஅவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\r\n\r\n\r\nகுழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். \r\n\r\nஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.\r\n\r\n\r\nஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.\r\n\r\n\r\nநான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும்.\r\n\r\n\r\n இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.\r\n\r\n\r\nஇவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். \r\n\r\n\r\nகுழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.\r\n\r\n\r\n\r\nதேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.\r\n\r\n\r\nதோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.\r\n\r\n\r\nசில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.\r\n\r\n\r\nமனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். \r\n\r\n\r\nஇந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.\r\n\r\n\r\nஉங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும்திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியானவாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.\r\n\r\n\r\nகுழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் எனஎதிர்பார்க்காதீர்கள். \r\n\r\nஅது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். \r\n\r\nஅதிகப்படியானகல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். \r\n\r\nதோல்வியும்வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லதுஎதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும்வாய்ப்பு உண்டு.\r\n\r\n https://goo.gl/Woizak

natarajan part 4

ஆர். மணி சென்னை: அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக செயல்பட்டவர் நடராஜன். ஆனால், அதை அம்பலப்படுத்துவதில் தமிழக ஊடகங்கள் மென்மையான போக்கைதான் கொண்டிருந்தன.சசிகலா வெளியே பெரும்பாலானோருக்கு, தெரிந்தபடி இதை செய்ததாக கருதலாம். ஆனால், நடராஜன் மறைமுமாக திரைமறைவில் இதை செய்தார். ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு பின்னால் இருந்த நடராஜனை தீவிர கண்காணிப்பிலேயே வைத்திருந்ததும் ஜெயலலிதாதான்.அனைத்து கட்சி தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்த நடராஜன் பற்றி தமிழக மக்களுக்கு பெரிதாக தெரியாமல் போக மீடியாக்களின் மென்மையான அணுகுமுறைதான் காரணம். அரசியல் ரீதியில் நடராசன் ஒரு அங்குலம் கூட முன்னேறுவதை ஜெ விரும்பியது கிடையாது. ஜெ உயிருடன் இருந்த வரையில் 24 மணி நேரமும் நடராசன் எங்கள் கண்காணிப்பில் தான் இருந்தார். இதில் எங்களது நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்கிறதா, எங்களில் யாராவது தனிப்பட்ட முறையில் நடராசனுக்கு நெருக்கமாக செல்ல முயற்சிக்கின்றனரா என்று அறியவும், ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது. இதனை வைத்தே ஜெ - நடராசன் விவகாரத்தின் முழு பரிமாணத்தை நீங்கள் இப்போது புரிந்து கொள்ளலாம் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர். ‘ஏனெனில் எந்த நேரமும் நடராசன் தன்னுடைய அரசை கவிழ்த்து விடுவார், தன்னுடைய விஸ்வாசமான எம்எல்ஏ க்களையும் கூட தன்னிடம் இழுத்துக் கொள்ளுவார் என்ற வலுவான எண்ணம் ஜெ விடம் இருந்தது. இதனை நான் இப்படி சொல்லுகிறேன், நடராசனின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்த வரையில் அவை வளர ஜெ ஒருபோதும் அனுமதித்தில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவது என்றால், ‘Jayalalithaa will not allow even a blade of a grass to grow at her feet, அதாவது, தனக்கு போட்டியாக ஒரு அங்குல அளவுக்கு கூட அரசியல் அபிலாஷைகள் நடராசனுக்கு எந்த கட்டத்திலும் வந்து விடக் கூடாது என்பதில் ஜெ உறுதியாக, அவருடைய இறுதி காலம் வரையில் இருந்தார். இதுதான் ஜெ - நடராசன் உறவின் ரகசியம் என்று மேலும் கூறுகிறார் அந்த அதிகாரி. ஜெ வின பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்த போது நடராசனை, மோடிக்கு, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அறிமுகம் செய்து வைத்தார். எல்லா கட்சிகளிலும் நண்பர்களை வைத்திருந்தார் நடராசன். வெளிநாட்டிலிருந்து ஒரு காரை இறக்குமதி செய்த 20 ஆண்டு கால வழக்கில் சமீபத்தில்தான், நடராசனுக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தன. இந்த நிலையில்தான் மரணமடைந்துள்ளார் நடராசன். தமிழ் அரசி, புதிய பார்வை என்று இரண்டு பத்திரிகைகளையும் நடத்திக் கொண்டிருந்தார் நடராசன். சில மாதங்களுக்கு முன்பு நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் (liver) மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. பின்னர் வீடு திரும்பினார். மார்ச் 16 ம் தேதி திடிரென்று அவரது உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நடராஜன் லைம்லைட்டில் இருந்தபோது நடந்த விஷயம் ஒன்றும் தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள அந்த வல்லரசு நாட்டின் துணைத் தூதரகத்தின் தலைமை அதிகாரியுடன் நடராஜனுக்கு நல்ல நெருக்கம் இருந்ததாம். அவரை 10 முறை சந்தித்துள்ளாராம். நடராஜன் வீட்டில் வைத்து அவருக்கு தடபுடல் விருந்தும் தரப்பட்டுள்ளதாம். இதை உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்துகிறார். ‘நடராசன் தீவிரமான இருதய நோய்த் தொற்றுக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அவருக்கு ‘வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டிருப்பதாகவும், அவரது உடல் நிலைமை மிகவும் மோசமாக (critical) இருப்பதாகவும் குளோபல் மருத்துவமனை தன்னுடைய 18 ம் தேதி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்தது. இந்த நிலையில், நடராஜன் உயிர் பிரிந்ததாக இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டது. ஜெ வின் ஜென்ம விரோதியான, தற்போதய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியுடன் நடராசன் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இது போன்று பலரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதுதான், எந்தக் கட்டத்திலும் நடராசனை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா மறுத்து விட்டதன் பின்னணி. ஆராயப் பட வேண்டிய மனிதரான நடராசனை, அவருடைய உண்மையான குணாம்சங்களின் பின்னணியில் வைத்துப் எடை போட வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் ஊடகங்கள் எடை போடவில்லை, என்று தான் கூற வேண்டும். ஏன் இதனை நாம் கூற வேண்டியிருக்கிறது என்றால், சசிகலாவுக்கு இணையாக நடராசனும் ஒரு அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகத்தான் (Extra Constitutional Authority) கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்திருக்கிறார். இதில் சசிகலாவின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருந்தன ... நடராசனின் நடவடிக்கைகள் திரை மறைவில் நடந்தன.... அதுதான் வித்தியாசம். இந்த கேலிக்கூத்து வேறெந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை....இந்தளவுக்கு Extra Constitutional Authority யாக கருதப்பட்டவர்கள் மீடியா வின் பார்வையில் கிட்டத்தட்ட மென்மையாகத் தான் அணுகப்பட்டார்கள். ஒரு விதத்தில் பார்த்தால், நடிகர் மற்றும் அரசியல் வாதியான விஜயகாந்த் மீடியாக்களுக்கு எதிராக செய்த ‘ஒரு காரியம் நியாயமானது தான் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் பற்றிய ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பேசிய, சமீபத்தில் காலமான, பத்திரிகையாளர் ஞாநி, விஜயகாந்த்தின் செய்கையை பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி விஜயகாந்த் செய்ததில் எந்த தவறும் இல்லை என்றார்; ‘பாதகம் செய்பவர்களை கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாரதி கூறினார். ஞாநி இறந்து போய் விட்டார்.ஆனால் அவர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் இன்றைக்கும் நியாயமானது தான் என்பதே நடராசனின் இன்றைய நிலைமை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.பகுதி 1, 2, 3, 4 https://goo.gl/Woizak

natarajan part 3

ஆர். மணி சென்னை: மறைந்த, முன்னாள் முதல்லவர் ஜெயலலிதாவின் தோழியாக கடைசி காலம் வரை உடன் இருந்தவர் சசிகலா. ஆனால், சசிகலா கணவர் நடராஜனை ஜெயலலிதா போயஸ் இல்லத்திற்கு உள்ளேயே விடவில்லை.சசிகலாவை திருமணம் செய்தும், நடராஜன் தனது மனைவியோடு வாழ்க்கை நடத்த முடியாத சூழல்தான் இருந்தது. ஆனால், இதற்கு காரணம் சசிகலாவின் தியாகம்தான் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் நடராஜன்.Read this: ஜெ. தீவிர கண்காணிப்பையும் தாண்டி, வாரத்தில் 3 நாட்கள் சசிகலாவுடன் ரகசியமாக பேசிய நடராஜன் - பகுதி 3கணவன்-மனைவியாக இணைந்து சில வருட காலமே வாழ்ந்துவிட்டு, வாழ்வின் பெரும்பகுதி பிரிந்திருக்க நேர்வது கொடுமைதானே. ஆனால், சசிகலாவும், நடராஜனும் விரும்பியே எடுத்த முடிவுதான் இது. அவ்வளவு சுலபமாக நடராசன் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தது இல்லை. ஆனால் 2014 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக, மார்ச் 22, 2014 ல் என்டிடிவி யின் ஸ்ரீநிவாசன் ஜெயினுக்கு ஒரு நீண்ட பேட்டியை கொடுத்தார். அது மக்களவைத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத த்துக்கு முன்ப கொடுக்கப் பட்ட பேட்டி. அதில் ஒரு கட்டத்தில் நடராசன் இப்படி சொல்லுகிறார்; ‘என் மனைவி சசிகலா ஜெயலலிதாவுக்காக தியாகங்கள் பல செய்திருக்கிறார். இப்போதும் நானும் எனது மனைவியும் தொடர்பில் இருக்கிறோமா என்று கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இது எங்களுடைய பர்சனல் விவகாரம். ஆனால் ஒன்றை சொல்லுகிறேன். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, தான் நிரபராதி என்பதை நிருபித்த பின், தன்னுடைய குடும்பத்தினரிடம் நான் மீண்டும் வந்து சேர்ந்து விடுவேன். இந்த கட்டத்தில் ஜெயலலிதாவை விட்டு என்னால் வர முடியாது என்று தெளிவாக எங்கள் குடும்பத்தினரிடம் சசிகலா கூறியிருக்கிறார் என்று நடராசன் கூறினார். இது விவரம் அறிந்தவர்கள் அனைவரும், குறிப்பாக பத்திரிகையாளர்கள் அறிய விரும்பம் செய்தி, சசிகலாவை ஜெயலலிதா 19.12.2011 ல் கட்சியை விட்டு நீக்கி விட்டு, தன்னுடைய போயஸ் தோட்ட வீட்டிலிருந்தும் வெளியேற்றி, பின்னர் 01.04.2012 ல் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்ட பிறகு, சசிகலா, தன்னுடைய கணவர் நடராசனுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது இல்லையா? என்பதுதான் ...சசிகலா எப்போதும் நடராசனுடன் தொடர்பில் தான் இருந்தார். இது வெளியில் எவருக்கும் தெரியாது. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது இருவரும் பேசிக் கொள்ளுவார்கள். சசிகலா விடம் இருந்து ஃபோன் வரும் சமயத்தில் நடராசன் தன்னுடைய நண்பர்களுடன் இருந்தார் என்றால், உடனே நடராசன் நண்பர்களை அடுத்த அறைக்கு சென்று விடுமாறு கூறி விடுவார். இதனை நானே பல முறை பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார் நடராசனுக்கு நெருக்கமான தமிழ் பத்திரிகையாளர் ஒருவர். ஜெயலலிதா வின் 1991 - 1996, 2001 - 2006 மற்றும் 2011 - 2016 ஆட்சி காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நடராசன் ஜெ வின் 2011 - 2016 ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் அதிகமாக தமிழக போலீசாரால் கைது செய்யப் பட்டார். இதற்கு காரணம், 2011 டிசம்பர் 19 ம் தேதி, சசிகலா உள்ளிட்ட சிலரை முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். சசிகலா உள்ளிட்டோருடன் எந்த தொடர்பும் யாரும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் திரும்ப, திரும்ப பல முறை எச்சரித்தார். ம.நடராசனின் அரசியல் அபிலாஷைகள் ஜெ வுக்கு எப்போதுமே நன்றாகத் தெரியும். இதன் காரணமாக தன்னுடைய முதல் இரண்டு ஆட்சிக் காலங்களில் இல்லாத அளவுக்கு 2011 - 2016 ல் நடராசனை 24 மணி நேரமும் உளவுத்துறையின் பார்வையில் வைத்திருந்தார் என்று கூறுபவர்களும் உண்டு. ‘நடராசன் ‘சில, பல காரியங்களை செய்து, சிலவற்றை பெற்றுக் கொள்ளுவதில் ஜெயலலிதாவுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக தனக்கு எதிராக, வேலைகளை செய்யத் தொடங்கினால் அதனை ஒருபோதும் ஜெ அனுமதிக்கப் பட்டார். யாராவது ஒரு கட்சிக் காரர், அவர் எம்எல்ஏ, எம்பி அல்லது அமைச்சர் என்று யாராக இருந்தாலும், அவர்கள் ஒரு திருமணத்தில் நடராசனை பார்த்தால் கூட அவர்கள் அங்கு இருக்க கூடாது. நேருக்கு நேர் பார்க்கும் சூழ்நிலை வந்து விட்டால், ஒரு வணக்கம் கூட நடராசனுக்கு இவர்கள் தெரிவிக்க கூடாது. இதனை மீறினால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த குறிப்பிட்ட நபர் - எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் - யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை பாயும்.(தொடரும்)பகுதி 1, 2, 3 https://goo.gl/Woizak

natarajan part 2

ஆர். மணி சென்னை: ஆரம்ப காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல், ஜெயலலிதாவுக்கும் நடராஜனுக்கும் இடையே, பிரச்சினை ஏற்பட்டது.இதன்பிறகு ஜெயலலிதா மறையும்வரை நடராஜனை தூரத்திலேயே வைத்திருந்தார். பல முறை கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன. நடராஜன் மனைவி சசிகலா, இறுதிவரை ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்தபோதிலும், நடராஜனை மட்டும் ஜெயலலிதா ஒதுக்கி வைக்க சில காரணங்கள் இருந்தன.Read This: தமிழக அரசியலின் புதிர் மனிதர் ம.நடராசன்- பகுதி 1நடராஜனின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்கள் தனக்கே எதிராக திருப்பும் என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருந்தது எனலாம். 1989 ல் ஜெ அணியில் இருந்த ஒரு அஇஅதிமுக தொண்டர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதாவது தனக்கு ஜெ அணியில் எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி நடராஜன் தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும், ஆனால் சீட் கிடைக்கவில்லை, பணத்தையும் திரும்பத் தர நடராசன் மறுக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த புகாரினை விசாரிக்க நடராஜனின் வீட்டுக்கு சென்ற போலீஸ் அங்கு ஜெயலலிதா தான் அரசியலில் இருந்து விலகி கொள்ளுவதாக எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றுகிறது. அந்தக் கடிதம் அடுத்த நாள், அது ஒரு ஞாயிற்றுக் கிழமை எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. இந்த விவகாரத்தை அப்போதய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெயலலிதா மார்ச் 25, 1989 ல் சட்டமன்றத்தில் கிளப்பினார். அன்றுதான் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி நிதி இலாகவையும் அப்போது தன் வசம் வைத்திருந்ததால் அவர் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஜெயலலிதா தன்னுடைய கடிதம் திருடப்பட்ட விவகாரத்தை கிளப்ப, பிரச்சனை வெடித்து, சட்டமன்றம் போர்களமானது. கருணாநிதியின் மூக்கு கண்ணாடி உடைந்தது, ஜெயலலிதா மீதும் தாக்குதல் நடந்தது. தலைவிரி கோலமாக ஆளுநர் மாளிகைக்கு போன ஜெயலலிதா, இனி அடுத்த முறை தமிழக சட்டமன்றத்துக்கு முதலமைச்சராகத்தான் வருவேன் என்று சபதம் எடுத்தார். 1991 ல் அந்த சபதத்திலும் வென்று முதலமைச்சராக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இந்த விவகாரம், நடராஜனால் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட விவகாரம் என்றே ஜெ நம்பினார். அதிலிருந்தே இருவருக்குமான மோதல் துவங்குகிறது. 2001 -2006, 2011 - 2016 ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் பல முறை நடராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2011 - 2016 ல் நில அபகரிப்பு சம்மந்தமாக சில வழக்குகள் நடராஜன் மீது போடப்பட்டன. தேசிய அளவிலும் நடராஜனுக்கு நண்பர்கள் உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்கள் கன்ஷி ராம் மற்றும் மாயாவதி போன்றவர்களுடன் நட்பை வைத்திருந்தார் நடராஜன். இலங்கை தமிழர் பிரச்சனையில் தீவிர ஈடுபாடு இருந்தது. பழ நெடுமாறன் நடராஜனுக்கு நெருக்கமான நண்பர். நெடுமாறன் மட்டுமல்லாமல் தமிழ் தேசியம் பேசும் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல குழுக்களுக்கும் நடராஜன் நல்ல நண்பர்தான். நடராஜன் - சசிகலா திருமணத்தை 1974 ம் ஆண்டு நடத்தி வைத்ததே, அப்போதய தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான். அடிப்படையில் அரசு ஊழியராகத் தான் நடராஜன் இருந்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 1967 ல் திமுக ஆட்சி வந்த போது உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக தமிழக அரசில் வேலை கிடைத்தது. 1976ல் அவசர நிலைக் காலத்தின் போது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் 1980 ல் மீண்டும் அரசு வேலையில் சேர்ந்தார். ஜெ உயிருடன் இருக்கும் வரையில் அவர் எதிரில் கூட நடராஜன் வந்தது கிடையாது. ஆனால் ஜெ இறந்து, அவரது பூத உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்ட போது அங்கு அந்த சவப் பெட்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். சுற்றிலும் சசிகலாவும், அவரது உறவினர்களும் தான் நின்று கொண்டிருந்தனர். அமைச்சர்கள் உட்பட மற்றவர்கள் அனைவரும் கீழே தான் இருந்தனர். யாரிடம் அஇஅதிமுக போய் விட்டது என்பதை மக்கள் அன்றே புரிந்து கொண்டார்கள்.பகுதி 1 https://goo.gl/Woizak

natarajan part 1

ஆர்.மணிசென்னை: சசிகலாவின் கணவர் ம.நடராசன் சென்னையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு நடராசனுக்கு சிறு நீரகம் மற்றும் கல்லீரல் (liver) மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.சிகிச்சை முடிந்த சில நாட்களில் நடராசன் வீடு திரும்பினார். ஆனால் திடீரென்று மார்ச் 16 ம் நாள் அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டு, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த மருத்துவமனையில் தான் நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராசனின் உடல் நிலை கவலைக்கிடமாகவே (critical) ஆக இருப்பதாகவே அந்த மருத்துவமனை அறிவித்தது. இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்துவிட்டது. தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதுமே புதிரான மனிதராக இருந்து கொண்டிருக்கும் ம.நடராசன், உண்மையில் யார்? எந்த அரசியல் மற்றும் அரசு பதவிகளிலும் எப்போதுமே உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்திராத மனிதராகத்தான் நடராசன் இருந்து வந்திருக்கிறார். ஆனால் நடராசன் கிட்டத்தட்ட தான் நினைத்ததை எல்லாம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் சத்தமின்றி சாதித்தே வந்திருக்கிறார். ஜெயலலிதா ஆண்ட 1991 -1996, 2001 - 2006, 2011 - 2016 வரையிலும் நடராசன் நினைத்தது எல்லாம் ஆட்சியிலும், அரசிலும் நடந்தது. எப்போதும் திரை மறைவிலிருந்து மட்டுமே அரசியல் செய்பவராகத் தான் நடராசன் இருந்து வந்திருக்கிறார். 2016ல் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பிறகும் இதுதான் நிலைமை. ஜெயலலிதா செப்டம்பர் 22, 2016 ல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, வழக்கம் போலவே திரை மறைவிலிருந்து கொண்டு அநேகமாக தமிழ் நாட்டையே ஆண்டார் நடராசன் என்றுதான் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லுகிறார்கள். இந்த பலம் அவருக்கு எப்படி வந்தது? நடராசனின் மனைவியின் பெயரை சொன்னால் எல்லோருக்கும் விஷயம் புரியும். நடராசனின் மனைவியின் பெயர் சசிகலா. ஆகவே இனிமேல் யார் இந்த நடராசன் என்ற கேள்வியை எவரும் கேட்க மாட்டார்கள். நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டோ அல்லது கையாலாகாத ஒரு கோழையின் கோவத்தை சுமந்து கொண்டோ தங்கள் தங்கள் வாழ்க்கை பாதைகளில் போய் விடுவார்கள். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா வின் கணவர் நடராசன் 1991 ம் ஆண்டு ஜெ முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஜெ வின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது மனைவி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் பலரும் போயஸ் தோட்டத்திலேயே தான் வசித்து வந்தனர். 1991- 96 ஆட்சிக் காலத்தில் போயஸ் தோட்டத்துக்கு வெளியில் இருந்து கொண்டே நடராசனால் பல காரியங்களை சாதிக்க முடிந்தது. சில நேரங்களில் நடராசனின் நடவடிக்கைகள் அத்து மீறி போகும் போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1994 ல் ஒரு முறை யதுகுல திலகன் என்ற உளவுத்துறை காவலரை தாக்கியதாக நடராசன் கைது செய்யப்பட்டார். இது ஜெ வின் 2001 - 2006 மற்றும் 2011 - 2016 ஆட்சிக் காலங்களிலும் தொடர் கதையாக மாறிப் போனது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் போலீஸ் நடராசனை ஒரு பக்கம் கைது செய்து சிறைக்கு அனுப்பும். ஆனால் சசிகலா எந்த சலனமும் இல்லாமல் ஜெ வின் போயஸ் தோட்ட வீட்டில் இருந்து கொண்டே தமிழக அரசாங்கத்தையும், அஇஅதிமுக வையும் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார். கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் ஒரு முறை கூட கைது செய்யப்படாத நடராசன், திரும்ப, திரும்ப ஜெ ஆட்சிக் காலங்களில் கைது செய்யப் பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டார். முதன் முதலில் நடராசனுக்கும், ஜெயலலிதாவுக்கும் மோதல் 1989 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள் வந்தது. எம்ஜிஆர் டிசம்பர் 24, 1987 ல் இறந்தார். அஇஅதிமுக இரண்டாக பிளந்தது. 1988 ல் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுக ஆட்சி, சட்டசபையில் நடந்த வன்முறைகளின் காரணமாக கலைக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு முழுவதும் தமிழகம் குடியரசு தலைவர் ஆட்சியில் இருந்தது. 1989 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜெ அணி 27 இடங்களையும், ஜானகி அம்மாள் அணி ஒரு இடத்திலும் வென்றது. திமுக ஆட்சியை கைப்பற்றியது, மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனார். ஜானகி அம்மாள் அரசியலில் இருந்து தான் விலகுவதாக 1989 தேர்தலுக்கு பிறகு அறிவித்து, இரட்டை இலை சின்னத்துக்கு தான் உரிமை கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவையும் திரும்ப பெற்றுக் கொண்டார். (தொடரும்) https://goo.gl/Woizak

m. Natarajan death

\r\n \r\nசென்னை:\r\nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன்(76) இன்று(மார்ச் 20) நள்ளிரவு 1.35 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.\r\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில், ஒரே நேரத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது; சிகிச்சை முடிந்து, நவம்பரில், வீடு திரும்பினார்.\r\n\r\nஇந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\r\n\r\nஇன்று காலை 7 மணி முதல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.\r\n\r\nநடராஜனின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதும் சசிகலா ஜாமீனில் அனுப்பப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Source Dinamalar\r\n https://goo.gl/Woizak