Sunday 29 December 2013

ஊழலை ஒழிக்க முடியாதா ?


ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணா ஹசேரா சாகும் வரை உண்ணாவிரதம் என்று தனது போராட்டத்தை பலமுறை நடத்தி கா ட்டிவிட்டார். இருந்தாலும் அவர் தனது போராட்டத்தை கைவிட்டதாக தெரியவில்லை. பாராளுமன்றம் பரப் பரப்பாக இயங்கி கொண்டிருந்த இந்த சூழலில் மீண்டும் தனது தொடர் போராட்டத்தை தொடங்கினார்.

இந்நிலையில் நீண்ட இழுப்பரிக்கு பிறகு ஒருவழியாக அரைகுறையாக இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணா ஹசேரா வும் ஒரு வழியாக தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

ஊழலுக்கு எதிராக ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் கோப்ராபோஸ்ட் என்கிற இணையதளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் ஊழலில் ஈடுபட்டுள்ளதை படம் பிடித்து கட்டியுள்ளது.

இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பதற்கு ரூபாய் 50,000 முதல் 50 இலட்சம் வரை லஞ்சம் கேட்ட செய்தி அனைவரையும் அச்சப் படுத்தியுள்ளது. இந்த லஞ்ச ஊழல் ஆபரேஷனை  நடத்தி படம் பிடித்து கட்டியுள்ளது கோப்ராபோஸ்ட்.. 

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மேடிடோட்ரன்ஸ் ஆயில் கம்பெனி என்கிற இல்லாத கம்பனியின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்த இவர்கள் 11 பேர் லஞ்சம் வாங்கியதாக சொன்னாலும் அதில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை மட்டும் குற்றவாளிகளாக கட்டுவது என்ன நோக்கம்.

இல்லாத ஒரு கம்பெனியின் பெயரில் இவ்வளவு பணம் கொடுத்து கடிதம்  வாங்க வேண்டியதன் அவசியம் என்ன?

ஒருவரை ஊழல்வாதி என்று கட்டுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் பொது இவ்வளவு பணத்தை விளையாட விட்டிருபது ஏதோ சதி விளையாட்டின் பின்னணி இருப்பதாகவே தெரிகிறது.

இல்லை சில பிளாக் மெயில் பத்திரிகையாளர்களை போல் இணையத்தில் இருப்பவர்களும் இதை  காட்டி பணம் பறிக்கும் நோக்கத்தோடு இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறர்களா என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

இது ஒரு வகையில் அந்த இணையத்திற்கு பரபரப்பான செய்தியாக கூட இருக்கலாம்.இருந்தாலும் இதனால் எல்லாம் ஊழலை ஒழித்து விட முடியாது. லஞ்சம் வாங்குபவர்கள் எப்போதும், எங்கேயும், எப்படியும் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அதை அவ்வளவு எளிதாக  மாற்ற முடியாது. 

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவே இவ்வளவு காலதாமதம்  செய்த இவர்களா இந்த ஊழல் எம்பிக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.

எல்லா சட்டமும் மக்களை ஏமாற்றதான். 

Monday 16 December 2013

ஓரின சேர்க்கைக்கு சோனியா காந்தி ஆதரவு

ஓரின சேர்க்கைக்கு சோனியா காந்தி ஆதரவு

ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி உயர் நீதி மன்றம் 2009இல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். இதை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 377இன் படி ஓரின சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம் இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி சின்கா.

ஓரின சேர்க்கை உரிமை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தலைகிழாய் மாற்றி இருப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

நமது அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு மாறான பழமையான, கொடுரமான, நியாமற்ற தீர்ப்பு இது. இதற்க்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்  என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 இதை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் அமோதிதுள்ளார். ஓரின சேர்க்கை என்பது தனி நபர் சுதந்திரம்.. அதை தனி நபர் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். நமது நாடு சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதில் புகழ் பெற்றது என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்வதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய சமுக நல்லொழுக்க மதிப்பீடுகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டி ருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இவர்களின் இந்த அறிக்கைகளை   பார்க்கும் போது ஓ  இவர்களும் அவர்கள் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டை ஆளக்கூடிய பொறுப்பில் இருக்கின்ற இவர்கள் இப்படியெல்லாம் கருத்து  சொல்லக்கூடாது. அதுவும் நாட்டில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கில் இப்படி யெல்லாம் பேசினால்......  நல்லா  இருக்கிற மக்கள் எல்லாம் எப்படி ஓட்டு  போடுவாங்க. 
ஓரின சேர்க்கை தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதை கண்டிக்கும் தினமலரின் கேலிசித்திரம்.

ஓரின சேர்க்கையாளர்கள் நிறைய பேர் இருந்து அவங்களுக்காக குரல் கொடுத்தா ஏதோ கொஞ்சம் அரசியல் பண்ணலாம். இவங்க ஆயிரத்தில் ஒருத்தர் கூ ட இல்லையே.  அப்போ எதற்காக இவர்கள்  பேசனும் .

என்னமோ டெல்லியில ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இதற்கும் எங்கள் ஆதரவு என்று சொன்னால் மக்கள் ஒட்டாலே அடிப்பார்கள்.  நாட்டை விட்டு ஓட ஓட அடிப்பார்கள். பாத்து பேசுங்க தலைவர்களே.

எல்லாம் அப்படித்தான் அழிவுகாலம் என்று வந்தால் இப்படித்தான். வாயை  கொடுத்து வண்ணான் கேட்டுபோனான் என்கிற கதை தான்.

இனிமேலாவது கொஞ்சம் யோசனை பண்ணி பேசுங்க.


Tuesday 3 December 2013

ஏற்காட்டில் யாருக்கு வெற்றி?


சமீப காலமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் எல்லோருக்கும் கொண்டாட்டம் . அதற்கு காரணம் திருமங்கலம் தேர்தல் பார்முலா தான். தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகன் அவரால் திருமங்கலத்து யானை என்று  புகழப்பட்ட அழகிரியால் புகுத்தப்பட்ட நவீன இடைத்தேர்தல் கலாச்சாரம்  2011 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை தொற்றுக்கொண்டது. ஏன்? ஏற்காடு இடைத்தேர்தலில் கூட  அதன் பாதிப்பு  தெரிகிறது . போட்டியே இல்லா விட்டாலும் இந்த ஒரு இடத்தை பிடிப்பதற்காக பல கோடிகள் செலவழிக்கும்  நிலை  இன்னமும் நீடிக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல் என்று சொன்னால் அதில் எப்போதும் ஆளும்கட்சி தான ஜெயிக்கும் என்பது வரலாறு. ஏன் என்று சொன்னால் இன்னும் இருக்கும் சொர்ப்பகாலத்தில்  மாற்று கட்சியை சார்ந்தவர்கள்  பதவிக்கு வந்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது எல்லா பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏன்? ஆளுங்கட்சி தவிர  மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள் பதவி வகிக்கின்ற தொகுதிகளின் நிலையே அதுதான். இந்த நிலையில் புதிதாக ஒருவரை ஏன்  தேர்ந்தெடுத்து சங்கடப்படவேண்டும் என்று எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்  அதனால் வழக்கம் போல் இத் தேர்தலில் ஆளும்கட்சி தான் ஜெயிக்கும் என்பதற்கு மாற்று கருத்தை சொல்ல முடியாது. 

ஏற்காடு இடைதேர்தலை பொருத்தவரை  அ .தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. மற்ற படி வேறு எந்த முக்கிய கட்சிகளும் களத்தில் இல்லை சுயோட்சைகள்   தான்  9 பேர் களத்தில் உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மனு செய்திருந்தாலும்  பெரும்பாலோரின் மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன. தேர்தல் வரலாற்றில் இதுவரை இத்தனை மனுக்கள் ஒரேயடியாக  நிராகரிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 

ஏற்காடு எஸ்.டி தனி தொகுதி என்பதால் உரிய சாதி சான்று இணைக்க வில்லை என்று சிலரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு   இருந்தாலும் பலரின் மனுக்களில்   கார் , விமானம் வைத்திருபதைப் பற்றிய தகவல்கள் சரியாக நிரப்பப்படவில்லை  என்று சொல்லி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

 முன்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ருபாய் 250 டெபாசிட் கட்டினால் போதும் என்ற நிலை   இருந்தது. இதனால் ஏராள மானோர் களத்தில் குதித்தனர். அதனால் வாக்கு சீட்டின் நிளம் அதிகமாக இருந்தது. சில தொகுதிகளில் ஒரு புத்தகம் அளவிற்கு கூட  வாக்கு சீட்டுக்கள் அட்சிடபட்டு வந்தது. இப்போது மின்னணு வாக்குபதிவு முறை வந்ததால் அவ்வளவு வேட்பாளர்களுக்கு எவ்வளவு பெட்டி வைப்பது என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்து டெபாசிட் தொகையை ரூபாய் 5000 ஆக உயர்த்தி தேவையில்லாமல் பலர் போட்டியிடுவதை தடுத்துள்ளது வரவேற்க தகுந்த மாற்றங்கள்.

 இந்த தேர்தலில் முதன்  முறையாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்வதற்கான 49 ஓ வுக்கு மாற்றாக நோட்டோ என்கிற பட்டன் வாக்குபதிவு இயந்திரத்தின் 16வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது எந்தவகையான மாற்றதை தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மே 2011இல் அ .இ.அ .தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் நடக்கும் நான்காவது இடைத்தேர்தல் இது. இதற்கு முன்பு நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோயில், புதுக்கோட்டை தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றிபெற்றுள்ளது. இவ் வளவுக்கும் இந்த முன்று இடைதேர்தல்களிலும் கடந்த ஆட்சியில் நடைபெற்றதை போன்ற அதிகார துஷ்பிரயோகம் எதுவும் அதிகமாக நடக்கவில்லை என்று சொல்வது சற்று ஆறுதலான விசயமாக பட்டாலும் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்க முடியாததாகவே இருக்கிறது.  

தேர்தல் ஆணையம் பல்வேறு பறக்கும் படைகளை அமைத்து தொகுதி முழுக்க பலரது பணத்தை பறிமுதல் செய்தாலும் இருதரப்பிலும் வாக்களர் களுக்கு பணம் பட்டுவாட செய்வது தடுக்க முடியாமல் தான் உள்ளது. ஆயிரம், இரண்டாயிரம் என்று இரு தரப்பிலும் மாறி மாறி, வாரி வாரி வழங்கப்பட்டு வருகிறது.  இது வெற்றியை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்கா?  இல்லை எதிர்கட்சிகளை டெபொசிட் இழக்க செய்ய  வேண்டும் என்பதற்கா?

ஏற்காடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் தி.மு.க.வின் சேலம் மாவட்ட செயலாளருமான சிவலிங்கத்திடம் தி.மு.க.தலைவர் கருணாநிதி டெபொசிட்  வாங்க  முடியுமா? என்று கேட்டதாக ஒரு தகவல். இதை அவர் நையாண்டியாக சொன்னாரோ என்னவோ, ;கடந்த மாதம் 28ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா தனது கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க.வை டெபொசிட் இழக்க செய்யுங்கள் என்று கட்டளை இட்டுள்ளார்.

இரு கட்சிகளின் தரப்பிலும்  ,முன்னால், இந்நாள் அமைச்சர்கள் தொடங்கி அவர்களின் அடிவருடிகள் அனைவரும் தொகுதியை ஆக்கிரமித்துள்ளனர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சி, ஒரு மந்திரிக்கு ஒரு ஊராட்சி என்று ஆளுக்கு இவ்வளவு வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கின. இதில் என்ன ஒரு ஆச் சரியமான் தகவல் என்னவென்றால் ஆளும் கட்சி அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களில் பவனி வராமல், அதிகர்ர  துஷ்பிரயோகம் செய்யாமல் சொந்த வாகனங்களை பயன்படுத்தியது தான். கடந்த கல ஆரவாரங்கள் எதுவும் இல்லாமல் ஆணையத்தின் கெடுபிடிகள் தவிர ஏவ்வித ஆடம்பரமும் இன்றி அமைதியான தேர்தல் அறிகுறியே அங்கு தென்படுகின்றது. 

கூட்டணி  கட்சிகள் அதன் தலைவர்களை வைத்து போடும் வோட்டு கணக்கெல்லாம் இப்போது சரிபட்டு வராது. சங்கரன்கோவில் இடை தேர்தலில் 12,144 வாக்குகள் பெற்ற தே மு தி க புதுகோட்டையில் தி.மு.க. போட்டியிடாத நிலையில் 30,500 வாக்குகளை பெற்றது. இப்போது ஏற்காட்டில் தே மு தி க போட்டியிடாத நிலையில் அக்கட்சியின் வாக்குகள் திமுகவின் மாறனுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் இது தொடர்பான்  மறைமுகமான ஆதரவோ, நேரடியான ஆதரவோ விஜயகாந்த் தரப்பில் இருந்து தி.மு.கவிற்கு இன்று வரை கிடைக்கவில்லை. இது திமுகவிற்கு வருத்தமே. இருந்தாலும் கிருஸ்ணசாமி, திருமாவளவன் உதயசூரியனுக்காக வாக்கு சேகரிப்பது சற்று ஆறுதலாக உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த போது அனைத்து கட்சிகளின் ஆதரவை கருணாநிதி கோரியபோது சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் வெளிப்படையாகவே தங்களின் ஆதரவு  இலைக்கு தான என்று சொல்லிவிட்டது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் அம்மாவுக்காக தனது பிரசாரத்தை செய்துள்ளார்.

இத்தனைக்கும் மேலாக இத் தொகுதியில் போட்டியிடும் அ தி.மு.க. வேட்பாளர் சரோஜா இத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமாளின் மனைவி என்பது  கூடுதல் சிறப்பு. இப்படி பல வகைகளிலும் இத் தொகுதியில்  அதிகமான வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இரட்டை இலைக்கே உள்ளதால் சரோஜா சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி படுத்தப்பட்டுள்ளது.