Wednesday 5 March 2014

நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம் 

 நேரம் நல்ல நேரம்
 நாம் நெருங்கி பார்க்கும் நேரம்
 காலம் நல்ல காலம்
என்றொரு பழைய  பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது. அதற்கு காரணமும் இருக்கின்றது. சில அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல வாக்காள பெருமக்களும்  நல்ல நேரத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பட்ட அல்லல்களுக்கு  முடிவு கட்ட வேண்டும் என்பது தான்.
அதற்கான நல்ல நேரம் இப்போது வந்துள்ளது.

இந்த நேரம் மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிக மிக நன்றாகவே இருக்கின்றது.
ஜோதிடத்தில் அதிக ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட ஜெயலலிதா  சாஸ்திரங்களை மதிப்பதிலும் தெய்வ வழிப்பாட்டிலும்   அதிக நம்பிக்கையும், ஆர்வமும் கொண்டவர். 1996இல் கருணாநிதியால் தான் கைது செய்யப்பட்டபோது  தன்னை கைது செய்ய வந்த காவல் துறை அதிகாரிகளிடம்  அனுமதி பெற்று  பூஜையை முடித்துக்கொண்டு மன உ றுதியுடன் சிறைக்கு சென்றார். எதையும் தெய்வ துணையுடன் அணுகுவது அவருக்கே உள்ள தனி சிறப்பு..

நாள் நட்சத்திரம் பார்ப்பது மட்டுமல்லாமல் ராசி எண் , ராசி நிறம் பார்ப்பதும் அவரது பழக்கம். அவரது ராசி எண் 9, 6, 7 என்று சொல்லப்படுகிறது. தான் எந்த காரியம் செய்தாலும்  இந்த எண்களில் வரும் படி தான் செய்வார். பல விசயங்களில் இந்த எண் கணிதம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. சில நேரங்களில் இது தோல்வியிலும் முடிந்துள்ளது. இருந்தாலும் அவர் தனது நம்பிக்கையை விட்டுவிடவில்லை.. தொடர்ந்து அதையே பின்பற்றி வருகிறார்.

அவரது தலைவர் MGR ம் அப்படி தான். அவரது ராசி எண் 7. அவரது வாழ்க்கையில் 7ம் எண் பெரும் பங்கு வகித்துள்ளது. இது தற்செயலாக  அமைந்ததா? இல்லை, தானாக அமைதுக்கொள்ளப்பட்ட்தா? என்பது தெரியாது. அதையே தற்போது ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார்.
இந்த முறை அவர் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட தேதி மே 16 இதன் கூட்டல் 7 இது MGR ன் ராசி எண் .

இப்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற நம்பிக்கையில்  தனது பிறந்த நாளான பெப்ரவரி 24ம் தேதி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். மார்ச் 3ம் தேதி தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

இது மாபெரும் அதிரடி நடவடிக்கை என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்
தற்போது  இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல் என்று அறிவித்திருப்பதும்  இந்த 24ம் தேதி ஜெய வருடத்தில் வருவதும் ஜெயலலிதாவிற்கு சாதகம் என்றே பலரும் சொல்கின்றனர்.
இது மட்டுமல்ல இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிகையும் மே 16;ம் தேதி என்று அறிவித்திருப்பது அம்மாவிற்கு அமோக வெற்றியை தரும் என்பதில் சற்றும் ஐயமில்லை. காரணம்  இந்த முறை அவர் முதல்வர் பதவி ஏற்ற நாள் மே 16.

இது எல்லாம் திட்டம் போட்ட நடக்கிறது?. நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் தானாக நடக்கும். நமது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரம் நன்றாக இருப்பதால் அவர் பாரத பிரதமர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

எல்லாம் காலத்தின் கையில் உள்ளது.