Friday 11 April 2014

கருணாநிதி ஐ புறக்கணிக்கும் ஸ்டாலின்

கருணாநிதி ஐ புறக்கணிக்கும் ஸ்டாலின்


2014இல் நடைபெறும் 16வது மக்களவை பொது தேர்தல் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் அனைவரும் சுறாவளி பிரசாரத்தில் இருக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும்  மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிரர்கள். அவர்களின் ஒவொரு அசைவையும் சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில்  அ .தி.மு.க.விற்கு ஆதரவாக பெரிய நட்சத்திர பட்டாளமே களத்தில் குதித்துள்ளன. தி.மு.க.விற்கு கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, குமரிமுத்து இவர்களை தவிர பெரிய நட்சத்திரங்கள் யாரும் பிரச்சரதிர்க்கு வரவில்லை.

இதில் கூட பார்த்திர்கள் என்றால் ஸ்டாலின் கூட்டத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. ஒரு காலத்திலே கருணாநிதியின் பேச்சை கேட்பதற்கு மணிகணக்கில் தவமிருபர்கள். இரவானாலும் பகலனாலும் தலைவரின் பேச்சை கேட்காமல் பக்கம் நகர மாட்டார்கள். அப்படி பட்ட தலைவரின் பேச்சே இப்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அப்போதெல்லாம் தலைவர்களின் பேச்சை கேட்பதற்கு பணம் கொடுத்து எல்லாம் யாரும் கூட்டத்தை சேர்க்க மாட்டார்கள். தானாகவே தேடி வந்து பிரச்சாரத்தை  கேட்பார்கள் மக்கள்.

இப்போதோ கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் தான் வருகிறார்கள்.தி.மு.க. என்றல் 100 ருபாய். அ .தி.மு.க.என்றல் 200 ருபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போக போக்குவரத்து வசதியும் சாப்பாட்டு  தண்ணி வசதியும் செய்து தரப்படவேண்டும். அப்படி எல்லாம் சேர்த்தல் தான் கூட்டத்தில் மக்கள் தலைகளை பார்க்க முடியும். இல்லாவிட்டால் தலைவர்கள் வெறும் தரையை தான் பார்த்து பேச வேண்டும். இப்படிதான் எல்லா தலைவர்களும் கூட்டத்தை சேர்க்கிறார்கள்.

இதில் யாருக்கு அதிக கூட்டம் என்பதை காட்டுவதில் போட்டி . கௌரவ பிரச்னை. அதனால் கூட்டத்திற்கு வருபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை வந்தால் போதும் கூட்டிட்டு வாங்க என்பது கட்டளை. அதனால் ஒரு நாள் கூலி கணக்காக ஆட்களை அழைகிறார்கள் . அவர்களும் போகிறார்கள். இதில் எந்த வித்தியாசமும் யாரும் பார்ப்பதில்லை.

ஜெயலலிதா தான் முன்பு இப்படி ஆசைப்பட்டார்  என்றால் இப்போது ஸ்டாலின் அவருக்கு மேலே இருக்கிறார். ஸ்டாலினை பொருத்தவரை இந்த மக்களவை தேர்தல் தி,மு,க,வை வெற்றி பெற வைக்கும் தேர்தல் அல்ல. தி.மு.க.வில் யார் பெரியவர் என்பதை காட்டும்  தேர்தல். அதனால் பெரியவரையே புறக்கணிக்கிறார் என்றால்  பாருங்களேன்.

அழகிரி - ஸ்டாலின் போட்டிக்கு பின் ஸ்டாலின் தான் தி.மு.க. என்பதை நிருபிக்கும் வகையில் அதற்கான காய்களை  நகர்திவருகிறார் ஸ்டாலின். மேடைகள் தோறும் அவர் ஜெயலிதா வை திட்டி வந்தாலும் தி.மு.க.வில்  ஒரு ஜெயலலிதாவாக காட்ட  முயற்சித்து வருகிறார்.

தான் போகும் பிரசார கூட்டங்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி குழுவினரை வுடன் அழைத்து செல்கிறார். வுடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்பும் செய்கின்றனர். இதில் என்ன வருத்தம் என்றல் இந்த விசயத்தில் தமக்கையையும்  மற்றவர்களையும் புறக்கணித்தால் கூட பரவாயில்லை தலைவரையே ஓரங்கட்டிவிட்டார் என்றல் பாருங்கள்.

கலைஞர் தொலைக்கட்சியில் அவருக்கே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது என்று சொன்னால்  வருத்தமாக இல்லையா?
 பதவி போதை எல்லாவற்றையும்  மறைத்து விடுகிறது. இதற்க்கு ஸ்டாலின் விதி விலக்கல்ல