மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம்? பரபர பின்னணி தகவல்கள் : :
பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோசென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று அதிமுக கூட்டத்தில் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.பல காலமாகவே இதுபற்றி ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொள்ள பின்னணி காரணம் இல்லாமல் இல்லை.அதிமுக அமைச்சரவையிலேயே மிகவும் சாதுர்யமானவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உணர்ச்சி வசத்தில் வார்த்தைகளை வெளியிடுபவர் இல்லை. எனவே பின் விளைவுகளை தெரிந்தேதான், இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பன்னீர்செல்வம்.பாஜக கோபம்இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதன் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்து தினகரன் வெற்றி பெற்றது முதலே, பாஜகவுக்கு பன்னீர்செல்வம்-எடப்பாடி அணி மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இவை ஓடாத குதிரைகளோ என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவேதான், இவர்கள் இணைப்புக்கு மத்தியஸ்தம் செய்த, சென்னை அறிவுஜீவி ஒருவர், கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பிறகு அதிமுகவினர் கோபத்திற்கு ஆளாகி, தனது வார்த்தைக்கு வேறு பொருள் இருப்பதாக சமாளித்தார்.ரஜினி திடீர் என்ட்ரிஆர்.கே.நகரில் பாஜக படுமோசமாக தோற்றது. அதிமுகவும் தோற்றது. இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் அறிவிப்பை வெளியிட்டார். இப்போது பாஜகவின் செல்லக்குழந்தை அவர்தான். எனவே, அதிமுகவை டேமேஜ் செய்யும் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர் தமிழக பாஜகவினர்.அதிமுகவை சீண்டும் பாஜகதமிழக இந்து அறநிலையத்துறை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் எச்.ராஜா, தமிழிசை அவ்வப்போது அமைச்சர்களை சீண்டி வந்தார். ஆனால் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு பகீர் ரகம். தமிழகம் தீவிரவாத இயக்கங்களின் பயிற்சி களமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது என அவர் கூறினார். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356ன்கீழ் ஆட்சியையே கலைக்க கூடிய அளவுக்கான குற்றச்சாட்டு இது.ஓபிஎஸ் பதிலடிபொன்னாரின் இந்த திடீர் தாக்குதலால் விழித்துக்கொண்டது அதிமுக தரப்பு. அதிலும், ஓபிஎஸ் தரப்பு. பொன்னார் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என பன்னீர்செல்வம் பதிலடி தொடுத்தார். உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துள்ள முதல்வரே சும்மா இருக்கும்போது ஓபிஎஸ், மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.மோடிக்கு எதிராக தர்மயுத்தம்இந்த நிலையில், மோடி கூறிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்ததாக ஓபிஎஸ் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. "நீங்கள் சொல்லிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், இப்போது அதிமுகவில் எனது ஆதரவாளர்களுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை, உங்கள் கட்சிக்காரர்களே தாக்குதலும் நடத்துகிறார்கள்" என்று மோடிக்கு சிக்னல் கொடுக்கும் முயற்சிதான் இந்த பேச்சு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தனது ஆதரவாளர்களுக்கு விரைவில் அதிமுக கட்சிக்குள் முக்கிய பதவிகள் வேண்டும் என்று லியுறுத்தி மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தொடுத்துள்ள தர்மயுத்தம் இது என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர்.எடப்பாடிக்கும் சிக்னல்மோடி கூறியதால்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், எனக்கு முழு மனதாக இந்த இணைப்பில் சம்மதம் இல்லை என்று எடப்பாடி தரப்புக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாகவும் ஓபிஎஸ் பேச்சை எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இப்போது பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் இடத்தில் மோடியும், எடப்பாடியும் உள்ளனர். அல்லது, மற்றொரு யுத்தம் தர்மத்தின் பெயரால் தொடங்கப்படலாம்.
Friday, 16 February 2018
Nan ean thunai MUDHALVARANEN
ஓ.பி.எஸ் துணை முதல்வராக யார் காரணம் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்ன போதும் பிரதமர் கூறியதாலேயே தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக சில உண்மைகளை ஒப்பு கொண்டுள்ளார். அதில் பாரத பிரதமரை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன்.பிரதமர் கூறியதால்அப்போது பிரதமர் என்னிடம் சொன்னது என்னவென்றால் நான் சென்னையில் நான் ஜெயலலிதாவை சந்தித்து அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் இணைய வேண்டும் என்று சொன்னார்.கட்சிப்பதவியே போதும் என்றேன்நானும் சரி என்று ஒப்புகொண்டேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி வேண்டாம் கட்சியில் மட்டுமே பதவி வேண்டும் என்று சொன்னேன்.
பிரதமர் இல்லை, இல்லை நீங்கள் அமைச்சரவையில் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதனால் தான் நான் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறேன்.அமைச்சர்களும் ஆதரித்தனர்நான் பிரதமர் சொன்னது குறித்து என்னுடைய சக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியிடம் சொன்னேன். அவர்களும் நீங்கள் எங்களுடன் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.2 முறை முதல்வராக இருந்திருக்கிறேன்இவர்கள் அனைவரும் சொன்னதால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன், மற்றபடி எனக்கு அமைச்சராகும் ஆசையெல்லாம் இல்லை. இரண்டு முறை ஜெயலலிதா என்னை முதல்வராக்கி இருக்கிறார் அந்த பெருமையே எனக்கு போதும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Friday, 9 February 2018
kamalpudukatchi
சென்னை: கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கவுள்ள அரசியல் கட்சி தயாரிக்கவிட்டதால் வரும் 12-ஆம் தேதி மன்ற நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு சென்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர்.இதையடுத்து கமல் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் ரஜினியின் ஏற்கெனவே அரசியலுக்கு வருவது போல் ரசிகர்கள் மத்தியில் பேசியதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தும் ரெடியாக உள்ளது, இனி அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து கமல் வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.இந்நிலையில் சென்னையில் உள்ள கமல் அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தினர் கூடினர். அப்போது மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 பேர் என்ற முறையில் நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர்.இதை கமல் இறுதி செய்ததை அடுத்து மன்ற நிர்வாகிகள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வரும் 12-ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தது கட்சி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி, அதை கமல் 21-ஆம் தேதி அறிவிப்பார்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் -பதிவு இலவசம்!' ! (?) https://goo.gl/Woizak
Saturday, 30 December 2017
Rajini political speach
Saturday, 16 May 2015
ஜெ. வழக்கு அடுத்து ...........?
கர்நாடக அமைச்சரவை வரும் 21-ல் கூடுகிறது... ஜெ. வழக்கில் அப்பீல் பற்றி முக்கிய முடிவு?
ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய மூன்று தரப்பும் தயக்கம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்!
மூன்று தரப்புக்கு வாய்ப்பு
கர்நாடகம் கேள்விக்குறி
என்ன லாபம்?
மேகதாது
சித்தராமையாவுக்கு நெருக்கடி
என்ன செய்யும் கர்நாடகா?
எஸ்கேப் கர்நாடகா
குளறுபடி கர்நாடகா
திமுக நிலை
பாமகவுக்கும் அரசியல்
இது பாஜக அரசியல்
Friday, 11 April 2014
கருணாநிதி ஐ புறக்கணிக்கும் ஸ்டாலின்
கருணாநிதி ஐ புறக்கணிக்கும் ஸ்டாலின்
2014இல் நடைபெறும் 16வது மக்களவை பொது தேர்தல் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் அனைவரும் சுறாவளி பிரசாரத்தில் இருக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிரர்கள். அவர்களின் ஒவொரு அசைவையும் சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்.தேர்தல் பிரசாரத்தில் அ .தி.மு.க.விற்கு ஆதரவாக பெரிய நட்சத்திர பட்டாளமே களத்தில் குதித்துள்ளன. தி.மு.க.விற்கு கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, குமரிமுத்து இவர்களை தவிர பெரிய நட்சத்திரங்கள் யாரும் பிரச்சரதிர்க்கு வரவில்லை.
இதில் கூட பார்த்திர்கள் என்றால் ஸ்டாலின் கூட்டத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. ஒரு காலத்திலே கருணாநிதியின் பேச்சை கேட்பதற்கு மணிகணக்கில் தவமிருபர்கள். இரவானாலும் பகலனாலும் தலைவரின் பேச்சை கேட்காமல் பக்கம் நகர மாட்டார்கள். அப்படி பட்ட தலைவரின் பேச்சே இப்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அப்போதெல்லாம் தலைவர்களின் பேச்சை கேட்பதற்கு பணம் கொடுத்து எல்லாம் யாரும் கூட்டத்தை சேர்க்க மாட்டார்கள். தானாகவே தேடி வந்து பிரச்சாரத்தை கேட்பார்கள் மக்கள்.
இதில் யாருக்கு அதிக கூட்டம் என்பதை காட்டுவதில் போட்டி . கௌரவ பிரச்னை. அதனால் கூட்டத்திற்கு வருபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை வந்தால் போதும் கூட்டிட்டு வாங்க என்பது கட்டளை. அதனால் ஒரு நாள் கூலி கணக்காக ஆட்களை அழைகிறார்கள் . அவர்களும் போகிறார்கள். இதில் எந்த வித்தியாசமும் யாரும் பார்ப்பதில்லை.
ஜெயலலிதா தான் முன்பு இப்படி ஆசைப்பட்டார் என்றால் இப்போது ஸ்டாலின் அவருக்கு மேலே இருக்கிறார். ஸ்டாலினை பொருத்தவரை இந்த மக்களவை தேர்தல் தி,மு,க,வை வெற்றி பெற வைக்கும் தேர்தல் அல்ல. தி.மு.க.வில் யார் பெரியவர் என்பதை காட்டும் தேர்தல். அதனால் பெரியவரையே புறக்கணிக்கிறார் என்றால் பாருங்களேன்.
அழகிரி - ஸ்டாலின் போட்டிக்கு பின் ஸ்டாலின் தான் தி.மு.க. என்பதை நிருபிக்கும் வகையில் அதற்கான காய்களை நகர்திவருகிறார் ஸ்டாலின். மேடைகள் தோறும் அவர் ஜெயலிதா வை திட்டி வந்தாலும் தி.மு.க.வில் ஒரு ஜெயலலிதாவாக காட்ட முயற்சித்து வருகிறார்.
தான் போகும் பிரசார கூட்டங்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி குழுவினரை வுடன் அழைத்து செல்கிறார். வுடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்பும் செய்கின்றனர். இதில் என்ன வருத்தம் என்றல் இந்த விசயத்தில் தமக்கையையும் மற்றவர்களையும் புறக்கணித்தால் கூட பரவாயில்லை தலைவரையே ஓரங்கட்டிவிட்டார் என்றல் பாருங்கள்.
கலைஞர் தொலைக்கட்சியில் அவருக்கே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது என்று சொன்னால் வருத்தமாக இல்லையா?
பதவி போதை எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது. இதற்க்கு ஸ்டாலின் விதி விலக்கல்ல
Wednesday, 5 March 2014
நேரம் நல்ல நேரம்
நேரம் நல்ல நேரம்
நேரம் நல்ல நேரம்நாம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
என்றொரு பழைய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது. அதற்கு காரணமும் இருக்கின்றது. சில அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல வாக்காள பெருமக்களும் நல்ல நேரத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பட்ட அல்லல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான்.
அதற்கான நல்ல நேரம் இப்போது வந்துள்ளது.
இந்த நேரம் மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிக மிக நன்றாகவே இருக்கின்றது.
ஜோதிடத்தில் அதிக ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட ஜெயலலிதா சாஸ்திரங்களை மதிப்பதிலும் தெய்வ வழிப்பாட்டிலும் அதிக நம்பிக்கையும், ஆர்வமும் கொண்டவர். 1996இல் கருணாநிதியால் தான் கைது செய்யப்பட்டபோது தன்னை கைது செய்ய வந்த காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பூஜையை முடித்துக்கொண்டு மன உ றுதியுடன் சிறைக்கு சென்றார். எதையும் தெய்வ துணையுடன் அணுகுவது அவருக்கே உள்ள தனி சிறப்பு..
நாள் நட்சத்திரம் பார்ப்பது மட்டுமல்லாமல் ராசி எண் , ராசி நிறம் பார்ப்பதும் அவரது பழக்கம். அவரது ராசி எண் 9, 6, 7 என்று சொல்லப்படுகிறது. தான் எந்த காரியம் செய்தாலும் இந்த எண்களில் வரும் படி தான் செய்வார். பல விசயங்களில் இந்த எண் கணிதம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. சில நேரங்களில் இது தோல்வியிலும் முடிந்துள்ளது. இருந்தாலும் அவர் தனது நம்பிக்கையை விட்டுவிடவில்லை.. தொடர்ந்து அதையே பின்பற்றி வருகிறார்.
அவரது தலைவர் MGR ம் அப்படி தான். அவரது ராசி எண் 7. அவரது வாழ்க்கையில் 7ம் எண் பெரும் பங்கு வகித்துள்ளது. இது தற்செயலாக அமைந்ததா? இல்லை, தானாக அமைதுக்கொள்ளப்பட்ட்தா? என்பது தெரியாது. அதையே தற்போது ஜெயலலிதா பயன்படுத்தி வருகிறார்.இந்த முறை அவர் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட தேதி மே 16 இதன் கூட்டல் 7 இது MGR ன் ராசி எண் .
இப்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற நம்பிக்கையில் தனது பிறந்த நாளான பெப்ரவரி 24ம் தேதி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். மார்ச் 3ம் தேதி தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.
இது மாபெரும் அதிரடி நடவடிக்கை என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல் என்று அறிவித்திருப்பதும் இந்த 24ம் தேதி ஜெய வருடத்தில் வருவதும் ஜெயலலிதாவிற்கு சாதகம் என்றே பலரும் சொல்கின்றனர்.
இது மட்டுமல்ல இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிகையும் மே 16;ம் தேதி என்று அறிவித்திருப்பது அம்மாவிற்கு அமோக வெற்றியை தரும் என்பதில் சற்றும் ஐயமில்லை. காரணம் இந்த முறை அவர் முதல்வர் பதவி ஏற்ற நாள் மே 16.
இது எல்லாம் திட்டம் போட்ட நடக்கிறது?. நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் தானாக நடக்கும். நமது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரம் நன்றாக இருப்பதால் அவர் பாரத பிரதமர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
எல்லாம் காலத்தின் கையில் உள்ளது.
