Monday, 19 March 2018
natarajan part 1
m. Natarajan death
Saturday, 17 March 2018
M. NATARASAN SERIES
Monday, 5 March 2018
DIABETIC REASONS
\r\n பிபிசி தமிழ் பகிர்வு \r\nநீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\r\n\r\nரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.\r\n\r\nஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\r\n\r\nஎதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தற்போதைய ஆய்வு அறிவித்திருக்கிறது என்று கூறுகின்ற நிபுணர்கள், தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.\r\n\r\nஉலக அளவில் வயதுவந்த 11 பேரில் ஒருவரை பாதிக்கின்ற நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, உறுப்பு நீக்கம் ஆகியவற்றுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கிறது.\r\n\r\nவகை 1 நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். பிரிட்டனில் உள்ள சூழ்நிலையில் சுமார் 10 சதவீத மக்களை இது பாதிக்கிறது.\r\n\r\nஇது உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை தாக்குகின்றது. எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான ஹார்மோன் சுரக்காமல் போய்விடுகிறது.\r\n\r\nவகை 2 நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது.\r\n\r\nஸ்வீடனிலுள்ள லுன்ட் பல்கலைக்கழக நீரிழிவு மையமும், ஃபின்லாந்தின் மூலக்கூறு மருத்துவ கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 14 ஆயிரத்து 775 நோயாளிகள், அவர்களின் ரத்த பரிசோதனை விபரங்களோடு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.\r\n\r\n\"த லான்செட் நீரிழிவு மற்றும் அகசுரப்பியல்\" சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், நீரிழிவு நோயாளிகளை 5 வேறுபட்ட குழுவினராக வகைப்படுத்தி காட்டுகின்றன.\r\n\r\nகுழு 1 - கடும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான இந்த நீரிழிவு, பரவலாக பாரம்பரிய வகை 1 நீரிழிவு வகையை சார்ந்ததாக உள்ளது. ஆரோக்கமாக தோன்றுகின்ற இளம் பருவத்தில் இருப்போரை இது பாதிக்கிறது. இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலையை இந்த வகை நீரிழிவு ஏற்படுத்துகிறது.\r\nகுழு 2 - கடுமையான இன்சுலின் குறைபாடு உடைய நீரிழிவு நோயாளிகள் தொடக்கத்தில் குழு 1 போலவே தோற்றமளித்தனர். இவர்கள் இளமையாக இருந்தனர். ஆரோக்கியமான எடையை கொண்டிருந்தனர். இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த குறைபாடும் இவர்களுக்கு இல்லை.\r\nகுழு 3 - சுரக்கப்படும் இன்சுலினுக்கு கடும் எதிர்ப்புதன்மையுடைய நீரிழிவு நோயாளிகள். இவர்கள் பொதுவாக அதிக எடையுடையவர்களாக இருந்தனர். இன்சுலின் சுரந்தது. ஆனால், சுரக்கின்ற இன்சுலினை அவர்களின் உடல் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை.\r\nகுழு 4 - மிதமான உடல் பருமன் தொடர்பான இந்த நீரிழிவு அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடையோரிடம் முக்கியமாக காணப்பட்டது. ஆனால், குழு 3-இல் உள்ளதை விட இயல்பான மிகவும் நெருக்கமானதாக இது இருக்கிறது\r\nகுழு 5 - நடு வயது தெடர்பான இந்த நீரிழிவு, நோயாளிகள் பிற குழுவினரை விட குறிப்பிடும்படியாக வயது அதிகமானதாக இருந்தபோது சில அறிகுறிகள் தோன்றின. இவர்களின் நோய் மிதமானதாக இருந்தது.\r\n\"மிகவும் துல்லியமான மருந்தை நோக்கி எடுத்து வைக்கின்ற சரியான காலடிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது\" என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் லெய்ஃப் குரூப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\r\n\r\n\"சிறந்த நிலையில் நோயை கண்டறிய இந்த ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட நல்ல சிகிச்சையை நாம் எதிர்பார்க்கிறோம்\" என்று அவர் கூறியுள்ளார்.\r\n\r\nஇந்த 5 குழுக்களில், இரண்டு மிதமானவற்றை விட 3 கடுமையான வடிவங்களுக்கு நாம் மிகவும் தீவிர சிகிச்சை அளிக்க முடியும்.\r\n\r\nநோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான நிலை இல்லாததால், குழு 2 நோயாளிகள் தற்போது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.\r\n\r\nஇருப்பினும், அவர்கள் அதிக குண்டாக இருப்பதைவிட பீட்டா செல்களின் குறைபாட்டால் இவர்களுக்கு நோய் உருவாகியிருக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.\r\n\r\nஇதனால், தற்போது வனை 1ஆக வரையறுக்கப்பட்டுள்ள மிதமான நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நெருங்கிய அளவிலான சிகிச்சை வழங்கலாம்.\r\n\r\nபார்வை இழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து நிறைந்தவர்களாக குழு 2 இருப்போர் உள்ளனர். ஆனால், குழு 3இல் இருப்போர் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, மேம்படுத்தப்பட்ட பரிசோதனையால் இதில் சில குழுவினர் பயன்பெறலாம்.\r\n\r\nசிறந்த வகைப்பாடு\r\n\r\nலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆலோசகரும், சிகிச்சை ஆய்வாளருமான டாக்டர் வின்டோரியா சலேம், \"முதலாம் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டும் மிகவும் துல்லியமான வகைப்படுத்தப்ட்ட அமைப்பு கிடையாது என்பதை பெருமளவு சிறப்பு நிபுணர்கள் அறிவர்\" என்று கூறியுள்ளார்.\r\n\r\n\"எதிர்காலத்தில் நீரிழிவை நாம் நோயாக எவ்வாறு பார்க்கப்போகிறோம் என்பது பற்றியது இது\" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\r\n\r\nஆனால், இந்த ஆய்வு இன்றைய நடைமுறையை உடனடியாக மாற்ற போவதில்லை என்ற எச்சரிக்கையையும் அவர் அளித்துள்ளார்.\r\n\r\nஇந்த ஆய்வு ஸ்காண்டினேவிய மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வாகும். தெற்கு ஆசிய மக்களிடம் நீரிழிவு அதிக ஆபத்து ஏற்படுத்துவது போன்று உலக அளவில் நீரிழிவின் பண்புகள் வித்தியாசமாகிறது.\r\n\r\n\"இன்னும் அறியப்படாதவைகள் அதிகம் உள்ளன. உலக அளவில் காணப்படும் மரபணு மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை பொறுத்து 500 துணை குழுக்கள் இருக்கலாம் என்று டாக்டர் சலேம் கூறியுள்ளார்.\r\n\r\n\"இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை உயரலாம்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\r\n\r\n\r\nவார்விக் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் சுதேஸ் குமார், \"இது முதலாவது காலடிதான். இந்த குழுவினருக்கு வேறுபட்ட வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறந்த பயன் கிடைக்குமா என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\r\n\r\nஇந்த நோயை புரிந்துகொள்வது ஒவ்வொரு வகையினருக்கு தனித்தனி சிகிச்சைகள் வழங்குவதற்கு உதவலாம். நீரிழிவு தொடர்பான சிக்கல்களை இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் குறைக்கலாம் என்று பிரிட்டனின் நீரிழிவு அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் எமிலி பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.\r\n\r\n\"இந்த ஆய்வு இரண்டாவது வகை நீரிழிவை மேலும் பிரிந்து அதிக விபரங்களோடு காட்டுகின்ற நம்பதகுந்த முயற்சியை எடுத்திருக்கிறது. ஆனால், இந்த நிலையில் வாழ்கின்ற மக்களில் இது எவ்வாறு காணப்படுகிறது என்பதை புரிவதற்கு முன்னால், இந்த துணை குழுக்களை பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Friday, 16 February 2018
மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம்? பரபர பின்னணி தகவல்கள் : :
பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோசென்னை: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று அதிமுக கூட்டத்தில் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.பல காலமாகவே இதுபற்றி ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொள்ள பின்னணி காரணம் இல்லாமல் இல்லை.அதிமுக அமைச்சரவையிலேயே மிகவும் சாதுர்யமானவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உணர்ச்சி வசத்தில் வார்த்தைகளை வெளியிடுபவர் இல்லை. எனவே பின் விளைவுகளை தெரிந்தேதான், இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பன்னீர்செல்வம்.பாஜக கோபம்இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதன் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்து தினகரன் வெற்றி பெற்றது முதலே, பாஜகவுக்கு பன்னீர்செல்வம்-எடப்பாடி அணி மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இவை ஓடாத குதிரைகளோ என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவேதான், இவர்கள் இணைப்புக்கு மத்தியஸ்தம் செய்த, சென்னை அறிவுஜீவி ஒருவர், கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பிறகு அதிமுகவினர் கோபத்திற்கு ஆளாகி, தனது வார்த்தைக்கு வேறு பொருள் இருப்பதாக சமாளித்தார்.ரஜினி திடீர் என்ட்ரிஆர்.கே.நகரில் பாஜக படுமோசமாக தோற்றது. அதிமுகவும் தோற்றது. இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் அறிவிப்பை வெளியிட்டார். இப்போது பாஜகவின் செல்லக்குழந்தை அவர்தான். எனவே, அதிமுகவை டேமேஜ் செய்யும் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர் தமிழக பாஜகவினர்.அதிமுகவை சீண்டும் பாஜகதமிழக இந்து அறநிலையத்துறை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் எச்.ராஜா, தமிழிசை அவ்வப்போது அமைச்சர்களை சீண்டி வந்தார். ஆனால் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு பகீர் ரகம். தமிழகம் தீவிரவாத இயக்கங்களின் பயிற்சி களமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது என அவர் கூறினார். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356ன்கீழ் ஆட்சியையே கலைக்க கூடிய அளவுக்கான குற்றச்சாட்டு இது.ஓபிஎஸ் பதிலடிபொன்னாரின் இந்த திடீர் தாக்குதலால் விழித்துக்கொண்டது அதிமுக தரப்பு. அதிலும், ஓபிஎஸ் தரப்பு. பொன்னார் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என பன்னீர்செல்வம் பதிலடி தொடுத்தார். உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துள்ள முதல்வரே சும்மா இருக்கும்போது ஓபிஎஸ், மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.மோடிக்கு எதிராக தர்மயுத்தம்இந்த நிலையில், மோடி கூறிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்ததாக ஓபிஎஸ் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. "நீங்கள் சொல்லிதான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், இப்போது அதிமுகவில் எனது ஆதரவாளர்களுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை, உங்கள் கட்சிக்காரர்களே தாக்குதலும் நடத்துகிறார்கள்" என்று மோடிக்கு சிக்னல் கொடுக்கும் முயற்சிதான் இந்த பேச்சு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தனது ஆதரவாளர்களுக்கு விரைவில் அதிமுக கட்சிக்குள் முக்கிய பதவிகள் வேண்டும் என்று லியுறுத்தி மோடிக்கு எதிராக ஓபிஎஸ் தொடுத்துள்ள தர்மயுத்தம் இது என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர்.எடப்பாடிக்கும் சிக்னல்மோடி கூறியதால்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன், எனக்கு முழு மனதாக இந்த இணைப்பில் சம்மதம் இல்லை என்று எடப்பாடி தரப்புக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாகவும் ஓபிஎஸ் பேச்சை எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இப்போது பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் இடத்தில் மோடியும், எடப்பாடியும் உள்ளனர். அல்லது, மற்றொரு யுத்தம் தர்மத்தின் பெயரால் தொடங்கப்படலாம்.
Nan ean thunai MUDHALVARANEN
ஓ.பி.எஸ் துணை முதல்வராக யார் காரணம் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்ன போதும் பிரதமர் கூறியதாலேயே தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக சில உண்மைகளை ஒப்பு கொண்டுள்ளார். அதில் பாரத பிரதமரை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன்.பிரதமர் கூறியதால்அப்போது பிரதமர் என்னிடம் சொன்னது என்னவென்றால் நான் சென்னையில் நான் ஜெயலலிதாவை சந்தித்து அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் இணைய வேண்டும் என்று சொன்னார்.கட்சிப்பதவியே போதும் என்றேன்நானும் சரி என்று ஒப்புகொண்டேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி வேண்டாம் கட்சியில் மட்டுமே பதவி வேண்டும் என்று சொன்னேன்.
பிரதமர் இல்லை, இல்லை நீங்கள் அமைச்சரவையில் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதனால் தான் நான் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறேன்.அமைச்சர்களும் ஆதரித்தனர்நான் பிரதமர் சொன்னது குறித்து என்னுடைய சக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியிடம் சொன்னேன். அவர்களும் நீங்கள் எங்களுடன் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.2 முறை முதல்வராக இருந்திருக்கிறேன்இவர்கள் அனைவரும் சொன்னதால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன், மற்றபடி எனக்கு அமைச்சராகும் ஆசையெல்லாம் இல்லை. இரண்டு முறை ஜெயலலிதா என்னை முதல்வராக்கி இருக்கிறார் அந்த பெருமையே எனக்கு போதும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Friday, 9 February 2018
kamalpudukatchi
சென்னை: கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கவுள்ள அரசியல் கட்சி தயாரிக்கவிட்டதால் வரும் 12-ஆம் தேதி மன்ற நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு சென்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர்.இதையடுத்து கமல் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் ரஜினியின் ஏற்கெனவே அரசியலுக்கு வருவது போல் ரசிகர்கள் மத்தியில் பேசியதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தும் ரெடியாக உள்ளது, இனி அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து கமல் வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.இந்நிலையில் சென்னையில் உள்ள கமல் அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தினர் கூடினர். அப்போது மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 பேர் என்ற முறையில் நிர்வாகிகளிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர்.இதை கமல் இறுதி செய்ததை அடுத்து மன்ற நிர்வாகிகள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வரும் 12-ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தது கட்சி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி, அதை கமல் 21-ஆம் தேதி அறிவிப்பார்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் -பதிவு இலவசம்!' ! (?) https://goo.gl/Woizak