Saturday 23 November 2013

அம்மா திட்டமா சும்மா திட்டமா ?


தமிழக மக்கள் எளிதாக எதையும் பெற வேண்டும் என்பதற்காக அரசே மக்களை நாடி வந்து உதவி செய்யும் விதமாக சொந்தவூர் தேடிவந்து அவர்களுக்கு தேவையான் சான்றிதழ்களை அந்த இடத்திலேயே  வழங்கும் வகையில் அம்மா திட்டம் என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது .

இந்த திட்டம் இப்போது பெயரளவுக்கு தான் நடத்தப்படுகிறதே தவிர இதன் முக்கியமான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.. இந்த திட்டம் தமிழக மக்களிடத்தில் அம்மாவின் ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என்கிற எதிபார்ப்பெல்லாம் இப்போது  ஏமாற்றமாகி விட்டது. இதற்கு காரணம் அரசுத்துறை அதிகாரிகளின் மெத்தனபோக்கு.

இந்த திட்டத்தை நடைமுறை படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் வட்டாச்சியர் தொடங்கி அவரை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் முகாம் நடைபெறும் போது அந்த கிராமத்திற்கு வர வேண்டும். அனால் இந்த முகாமிற்கு சில நேரங்களில்  அந்த கிராம நிர்வாக அதிகாரிகளே வருவதில்லை என்பது வேதனையான விஷயம். சாதாரண அலுவலர்களிடம் வழங்கப்படும் மனுக்கள் எங்குபோய் சேர்கின்றது என்றே தெரியவில்லை என்பது அப்பாவி மக்களின் குற்றச்சாட்டு.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றை வாங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாச்சியர் என்று அதிகாரிகளை தேடி அலைவதற்குள் போதுமடசாமி என்று அலுத்துக் கொண்டிருந்த நிலை மாற்றப்பட்டு  முதலமைச்சர் அம்மா அவர்களின் பெயரில் வந்துள்ள இந்த திட்டம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் , நமக்கு தேவையான எல்லா வற்றையும் இங்கேயே வாங்கிக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்திருந்த   மக்களுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மக்கள் மத்தியில் போற்றி புகழப்பட வேண்டிய இந்த திட்டம் அம்மா திட்டமா இல்லை இது சும்மா திட்டமா? என்று பேசப்படுகின்ற வகையில் மக்களின் அவப்பெயருக்கு ஆளாகியுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் மக்களுக்கான் திட்டங்கள் அனைத்தும் மக்களை எளிதாக போய் சேரவேண்டும் என்று புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இதை முறையாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்பு அரசு அதிகாரிகளிடம் உள்ளது. அவர்கள் இதை முறையாக செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதல் . மக்களின் வரவேற்பை இழந்து வருகிறது .

இதற்கு கரணம் என்ன? மக்கள் நம்மை தேடி வந்தால் பணம் வாங்கிக்கொண்டு இவற்றை கொடுக்கலாம். நாமே நேரடியாக மக்களை தேடிச்சென்று எப்படி பணம் வாங்குவது  இந்த திட்டத்தால் நமக்கு வரும் வருமானம்  பறிபோகிறது என்கிற வெறுப்பு தான் அரசு அதிகாரிகளின் அலட்சியத்திற்கு கரணம் என்கின்றனர்  இதற்காக அலைந்து திரிபவர்கள். 

அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இதுப்போன்று  மேல் வருமானத்தை எதிர்பார்க்கும் அரசுத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதன் முலமே அரசு நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இல்லாவிட்டால் இதற்கெல்லாம் முடுவிழாதான்  காண முடியும்.   

No comments:

Post a Comment