Saturday 1 February 2014

தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி யுத்தம் நிஜமா ? நாடகமா?

தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி யுத்தம் நிஜமா ? நாடகமா? 


இன்றைக்கு தமிழகதில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி மு.க.அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து மட்டுமல்ல அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க்கப்பட்டது தான். 

இதற்கான அறிவிப்பை வெளியிட்ட அக் கட்சியின் பொதுசெயலாளர் க.அன்பழகன் அவர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார் அதனால்தான் அவரை தற்காலிகமாக நீக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.  

இது குறித்து ஆரம்பத்தில் பேசிய கருணாநிதி  தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி அவருக்காக உருவாக்கப்பட்டது அது வேறு யாருக்கும் வழங்கப்பட மாட்டது என்று கூறினார். விஜயகாந்த் கூட்டனிக்கு அவர் உளை வைத்ததாலே இந்த நடவடிக்கை. அவர் கட்சியில் இருந்தால் விஜயகாந்த் இந்த பக்கம் வரமாட்டார் எனவே கொஞ்ச நாளைக்கு அவரை தள்ளி வைக்கலாம் என்று சொல்லப்பட்டது. 


அனால் சமீபத்தில்  பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கருணாநிதி, தன்னைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் வெறுக்கத்தக்க வகையில் அழகிரி பேசினார் என்றும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்றும் அழகிரி கூறியதை எப்படி ஒரு தகப்பனார் பொறுத்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த குற்றச்சாட்டிற்கு, பதிலடி கொடுத்திருக்கிறார் அழகிரி.


"என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ",  என்று அழகிரி கூறியுள்ளார்.



உடனடியாக மதுரையில் இது குறித்து பேட்டி அளித்த அழகிரி தலைவரின் பேட்டி கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என்மீது இப்படிபட்ட ஒரு அபாண்டத்தை சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால், அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்

உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.

என்னை பற்றி திமுக தொண்டர்கள் நன்றாக அறிவார்கள். என்றைக்கும் நான் தொண்டர்கள் பக்கம் தான் இருப்பேன், தலைவர் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும். இவர் சாவதற்கு முன்னாடி நாங்கள் சாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாங்கள். ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவரது கண்ணீர் எங்களின் பிணத்தின் மீது விழணும் என்று இந்த பேட்டியை முடிக்கிறேன் என்றார்.

இது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள். கருணாநிதி தனக்கு சிக்கல் வரும்போது ஏதாவது ஒரு புரளியை கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுவது வழக்கம். இதுவரை குடும்ப அரசியல் செய்தவர்கள், இப்போது குடும்பத்துக்குள்ளேயே அரசியல் செய்கிறார்கள்.

கடந்த 30ம் தேதி  நடந்த அழகிரி பிறந்த நாள் விழாவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களை மீண்டும் சேர்த்துக்கொண்டு தென் மண்டல செயலாளர் பதவியை கொடுத்தல் பரிசீலிக்கப்படும் என்று அழகிரி அறிவித்திருப்பதை பார்க்கும் போது  இது நிஜமல்ல நாடகம் என்றே தோன்றுகின்றது.

விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சொன்னதைப் போல் இது நிஜமான நாடகமாக கூட இருக்கலாம். நாளைக்கு விஜயகாந்த் இந்த கூட்டணிக்கு வராமல் போனால் மகனை அருகில் அழைத்து வைத்துக்கொள்வரோ  என்னவோ?

உலகமே ஒரு நாடக மேடை இதில் அனைவரும் நடிகர்கள் தானே. இதற்க்கு கலைஞ்சரும்  அழகிரியும் .விதி விலக்கல்ல. எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து.


ரவுடிகளையும் புரோக்கர்களையும் அருகில் வைத்துக்கொண்டு வாய்ப்புகளை வீணடித்த அழகிரி

- ஒரு அலசல்
மு.க.ஸ்டாலினுக்காக மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது, அஞ்சாநெஞ்சனாக திமுகவின் அடுத்த தலைவர் ஆக இருந்தவர் இப்படி செல்லாக்காசாகி இன்று பலவீனமான நிலையில் திமுகவை விட்டு விலக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு கருணாநிதி சப்போர்ட், கருணாநிதி ஸ்டாலினுக்கு வெண்ணையையும் அழகிரிக்கு சுண்ணாம்பையும் வைத்தாரா என்று பார்த்தால் உண்மையில் ஸ்டாலினுக்கு தான் சுண்ணாம்பை வைத்தார் கருணாநிதி, அழகிரிக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார் கருணாநிதி. அத்தனையையும் வீணடித்துள்ளார் அழகிரி.

அஞ்சா நெஞ்சன் அழகிரியாக தொண்டர்களுடன் நெருங்கி பழகுபவராக, அனைத்து தொண்டர்கள் வீட்டு கல்யாணத்துக்கும் காதுகுத்திக்கும் சென்று வருபவராக, தன் ஆதரவாளர்களை எந்த சூழலிலும் கைவிடாதவராக, எதிர்கட்சிகளையும் எதிரிகளையும் தேர்தல் களத்திலும் பிற நேரங்களிலும் அச்சுறுத்தும் விதமாக அதிரடியாக அரசியல் நடத்தியவர் தான் அழகிரி.


அந்த நேரத்தில் ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிப்பவராக, தன்னுடைய தீவிர ஆதரவாளர்களுக்கு கட்சியில் சிக்கல் வரும்போது அவர்களுக்காக மேலிடத்தில் வாதாடாமல் கைவிட்டவராக தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவராக, எதிர்கட்சிகளை சரியாக கையாள தெரியாதவராக அவர் மேல் விமர்சனங்களை திமுகவினரே கூட சில ஆண்டுகளுக்கு முன் வைத்தனர்.

திருமங்கலம் தேர்தல்களில் அழகிரியின் அகாசாய நடவடிக்கைகள், அவரின் உழைப்பு, பாராளுமன்ற தேர்தலில் திமுகவினரே தோல்வியை எதிர்பார்த்த  நிலையில் தென்மாவட்டங்களில் எல்லாம் வெற்றிபெற வைத்த உழைப்புகள் எல்லாம் திமுகவினரிடமே மந்தமான ஸ்டாலினுக்கு இவர் பரவாயில்லை என்று பேச்சு கிளம்பியது. இந்த எதிர்பார்ப்புகள் வாய்ப்புகளை தானே வீணடித்தார் அழகிரி.


அழகிரி தன் அருகில் அட்டாக் பாண்டி போன்ற ரவுடிகளையும் பொட்டு சுரேஷ் போன்ற புரோக்கர்களையும் வைத்து அரசியல் நடத்தி அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்டாலினோ தன் அருகில் பொன்முடி, கே.என்.நேரு போன்ற தலைவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வந்தார்.அழகிரி தென்மாவட்ட முக்கிய திமுக தலைவர்களை எடுத்தெறிந்தும் மரியாதையின்றியும் அரசியல் நடத்திய நேரத்தில் ஸ்டாலினோ தன் ஆதரவாளர்களாக இல்லாத  ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களையும் பகைத்துக்கொள்ளாமல் மரியாதையுடன் நடத்தி வந்தவர்.

தா.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களை அழகிரி ஆதரவாளர்கள் போட்டு தள்ள தன்னை கடுமையாக எதிர்த்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அவரது சாதியில் இருந்தே பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்பவரை உருவாக்கி அவர் வழியாக தான் எதிர்ப்பு அரசியல் செய்து வந்தார் ஸ்டாலின்.

விளைவு மதுரை முதல் கன்னியாக்குமரி வரை இருந்த ஆதரவு போய் சாத்தூர் ராமச்சந்திரன், சுரேஷ், தூத்துக்குடி பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஸ்டாலினை நோக்கி செல்ல காரணமாகிவிட்டார், கடைசியில் தங்கம் தென்னரசுவும் கூட ஸ்டாலினிடம் அடைக்கலமாக அழகிரி ஆதரவு பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது.

ஸ்டாலின் தென்மாவட்டங்களில் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கும் நேரத்தில் வடமாவட்டங்களில் வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோர் அழகிரிக்கு ஆதரவாக செயல்பட வந்த நேரத்திலும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

தா.கி.கொலை, மதுரை தினகரன் அலுவலகம் எரித்து மூன்று பேர் கொலை என ரவுடி இமேஜை அழகிரி பொதுமக்களிடம் பெற ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக தன் அமைதி நடவடிக்கைகள் மூலம் ஜென்டில்மேன் அந்தஸ்தை பெற்றார்.

2011ல் ஆட்சியை திமுக இழந்த உடன், இதற்காகவே காத்திருந்தது போல மு.க.ஸ்டாலின் உடனடியாக சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார், கட்சித்தலைவர்களையும் சோர்ந்திருந்த தொண்டர்களையும் போய் சந்தித்தார், ஆனால் அழகிரியோ நினைத்தாலும் கூட சுதந்திரமாக சுற்ற முடியாதவாறு அதிமுக அரசின் வழக்குகள் இறுக்க பங்களாவில் போய் பதுங்கி கொண்டார். இதை சரியாக பயன்படுத்திய ஸ்டாலின் முழு திமுகவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி மதுரையின் உள்ளேயும் அழகிரியின் ஆதரவாளர்களை இழுத்தார், புரோக்கர் பொட்டு சுரேஷ்க்காக தன்னுடைய பல ஆதரவாளர்களை ஸ்டாலினிடம் இழந்தார் அழகிரி.

கடைசியில் அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷையும் போட்டு தள்ள, பொட்டு சுரேஷூம் போய் சேர்ந்தார், வழக்குகள் போய் தென்மாவட்டத்தில் கட்சியில் இருந்த பிடியும் போய் கடைசியில் மதுரையிலேயே தன் பிடியை இழந்த அழகிரி தன் நிலையை உணர்ந்து பதுங்கியிருக்கலாம், பெற்றோரிடம் முரண்டு பிடித்து முரண்டு பிடித்து அடிவாங்கி சத்தம் போட்டு கைகால்களை உதைத்து அழும் குழந்தை  கடைசியில் எதுவுமே நடக்காது என்பதை அறிந்து அழுகை குறைந்து தேம்பி தேம்பி தூங்கி போவதை போல செல்லாக்காசாக கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் அழகிரி.

அதிரடிகளும், ஆவேசமும், முரட்டுத்தனமும், அச்சுறுத்தலும் தளபதிகளுக்கு தான் அழகு, தலைவர்களுக்கல்ல, அழகிரி தளபதியாக இருக்கதான் லாயக்கு, தலைவராக இருக்க அல்ல.

இந்த நிலைக்கு அழகிரி தள்ளப்படவில்லை, அழகிரி தன்னை தானே இந்த நிலைக்கு தள்ளிக்கொண்டார்
கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.

தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின்  அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல்வாக்கும் அவரது அப்பாவான கலைஞர் என்பவரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.

அழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் தன்னை திமுகழகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்த்திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமுகமாகி இருப்பவர். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட்சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னும் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.

இன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவிக்காததுதான். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கையில் கட்சியை முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத்தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சமகால மக்களின் தெளிவான விருப்பங்களை புரிந்தவராய் ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றவர் ஸ்டாலின்....அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாரளுமன்றத் தேர்தலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்....

ஸ்டாலினின் திட்டமிடுதலில்  இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழகம் முழுமையா ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது.... மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை...!

நாடகமாயிருந்தாலும் அரசியல் சூழ்ச்சியாய் இருந்தாலும்....
அழகிரி நீக்கம் அதிரடிதான்...!

தேர்தலில் யார் யாரோடு கூட்டணி?  திமுக காங்கிரசில் இருந்து விலகிய பிறகு தேமுதிக வோடு கூட்டணி அமைக்க கலைஞரே ஆசைப்படுகின்றாராம்...அதாவது குடிகாரன் என்று கடந்த தேர்தலில் விமர்சித்த விசயகாந்தோடு கூட்டணியாம்....

கடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் வடிவேலுவை பயன்படுதித்தி விசயகாந்தை கேவலப்படுத்தாத மேடை இல்லை என்று சொல்லலாம்...அந்த அளவிற்க்கு கேவலப்படுத்தி பேசிய போது கை தட்டி ஆராவாரம் செய்தவர்கள் ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி என்று எல்லோருமே தான்...


இன்று நாடாளுமன்றத் தேர்தலில் பதவி மோகத்திற்காக யாருடைய காலிலும் விழத் தயாராக இருப்பது திமுகவின் முதல் கட்டத் தோல்வியை காட்டுகின்றது....மதுரையில் யாருக்கு பதவி என்ற போட்டியை விட யாருக்கு எந்த சுவர் (விளம்பரம் செய்ய) என்ற பிரச்சினை ஸ்டாலின் மற்றும் அழகிரி தொண்டர்களுக்கு உருவாகிற்று...
எப்போதுமே கலைஞரின் காலடியிலே இருக்கும் ஸ்டாலின் கலைஞரின் நன்மதிப்பை பெற்று விட்டார் போலும்...அதனாலோ என்னவோ அழகிரி தரப்பு நியாயங்கள் கலைஞரின் செவிகளுக்கு சென்று விடவில்லை....விளைவு கருத்துப்போர், தற்போது இடைநீக்கம் வரை சென்றுள்ளது.... 


ஆனால் தீர்ப்பு என்னவோ ஒரு தலைப் பட்சமாக இருப்பது போல் தோன்றுகின்றது...பதவிக்காக தொண்டர்களைத்தான் கழட்டி விடும் அரசியல் சாணக்கியர் இன்று சொந்த மகனையே இடை நீக்கம் செய்துள்ளார்...(அல்லது செய்யப்பட தூண்டப்பட்டுள்ளார்) 
நாடகமா ? நிஜமா? பட்டிமன்றத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி!
தேமுதிக வோடு கூட்டு சேரக் கூடாது என்பது அழகிரியின் தனிப்பட்ட எண்ணம்...கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்று சொல்லி முடித்திருக்கலாம்...ஆனால் அதையும் தாண்டி அழகிரி ஆதரவாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியத்தை தருகின்றது...


எல்லாவற்றையும் தாண்டி அழகிரியின் இடை நீக்கத்‌திற்க்கு திமுக அமைச்சர்களோ அல்லது வேறு எவருமே ஆதரவு தெரிவிக்காத நிலையில் வீரமணி வாழ்த்து தெரிவித்திருப்பது எல்லோருக்குமே இதுவுமே ஒரு நாடகமோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது....வீரமணி கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்துவிட்டாரோ என்ற எண்ணமும் தோன்றுகின்றது...
இதன் மூலம் கலைஞர் குடும்ப அரசியல் செய்கின்றார் என்ற கறை அழிந்துவிட்டதாக சொல்கின்றார் வீரமணி????  தலைவர் வீரமணி அவர்களே....கலைஞரின் குடும்பம் என்பது வெறும் அழகிரி அவர்களோடு முடிந்து விட்டதா? அப்படி என்றால் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி என்பவாகள் எல்லோரும் வேறு குடும்பத்தை சார்ந்தவர்களா, என்னதான் சொல்ல வர்றீங்க...


உண்மையில் இது இடை நீக்கம்தானா? 
நிச்சயம் விசயகாந்துக்கு இது ஒரு நல்ல பாடம்.... பதவிக்காக சொந்த மக னையே இடை நீக்கம் செய் தவர், நாளை விசயகாந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது வெட்ட வெளிச்ச்சமாகி விட்டது 

No comments:

Post a Comment