Tuesday, 21 January 2014

யார் யாருடன் கூட்டணி?

யார் யாருடன் கூட்டணி?

2014  ஏப்ரல், மே மாதங்களில்  நடக்க இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியாவின் தலை யெழுத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலாக எல்லோ ராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

2004 முதல் தற்போது வரை  தொடர் ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு இந்த 10 வருடங்களில் இந்தியாவின் வளர்ச் சிக்கு எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எல்லோராலும்  எழுப்பப்பட்டு வருகிறது.


எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமல்ல ஒவொரு இந்திய குடிமகனும் எதிர்க் கின்ற ஒரு ஆட்சியாக  இன்றைய மத்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.

எதில் பார்த்தாலும் ஊ ழல் எங்கு பார்த்தாலும் ஊழல். அகரவரிசைப்படி a to z  என்று சொல்லும் அளவிற்கு  அணைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரிதாடுகின்றது. விலை வாசி உயர்வும் வானை  பிளக்கிறது. எதுவும் இந்த அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் மக்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். இந்த அரசை கைகழுவிவிட நேரம் பார்த்துக்கொண்டு உள்ளனர்.


மக்கள் எப்படியோ இருக்கட்டும் கூட்டனியையும் பண பலத்தையும் வைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற கனவில் ஆளும் காங்கிரஸ்  கட்சி  இருக்கிறது. இருந் தாலும்  இந்த கட்சிக்கு மக்கள் மததியில் இருக்கும் அவப்பெயரை  பார்த்து ஏற்க் கனவே  கூட்டனியில் இருந்த கட்சி களே கூட்டனி இல்லை என்று சொல்லி  இவர்களை  கழற்றி விட்டு விட்டது.

தமிழகதில் இந்த கட்சியுடன் யாரும் கூட்டு சேரும் நிலையில் இல்லை. இந்த கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டால்  நமது கட்சிக்கு இருக் கின்ற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும், இருக்கிற வாக்கு சதவிகிதமும் குறைந்து விடும் என்பதால் கையை பார்த்து பயந்து ஓடுகின்றனர். அதனால் தமிழகத்தில் இந்த கட்சி தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இப்படி இந்த கட்சி தனித்து  போட்டியிட்டால் ஒரு mp தொகுதிக்கு 10,000 ஓட்டு  வாங்கினாலே அது பெரிய விஷயம். அதனால் இங்குள்ள பெரிய கட்சிகள் மட்டுமல்ல சிறிய கட்சிகளும் இந்த தேசிய கட்சியை  புறக்கணிக்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாக போட்டியிடும்.


இதற்கு  அடுத்த நிலையிலுள்ள இன்னொரு தேசிய   கட்சியான பிஜேபி அமைப்பு  ரீதியாக தமிழகத்தில் பெரிய கட்சியாக வளரவில்லை என்று சொன்னாலும்  மோடி அலை ஓரளவிற்கு தாமரைக்கு கை கொடுக்கும் என்றே சொல்லலாம். இதை வைத்து இங்குள்ள சில சிறிய கட்சிகள்  இந்த கட்சியுடன்  கூட்டனி சேர துடியாய் துடிக்கின்றன. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் கூட  பெரிய வாக்கு வங்கியை பெற முடியாது. பெரும் பாலான தொகுதி களையும் கைப்பற்ற முடியாது. இருந்தாலும் இந்த அணி போட்டி யிடுவதையும்  தவிர்க்க முடியாது.

பாமக எந்த திராவிட கட்சியுடனும் கூட்டனி இல்லை என்று சொல்லி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே  வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி இருந்தாலும் தேர்தல் நெருங்கும் போது ஏதாவது  ஒரு கட்சியுடன் கூட்டனி வைத்துக்கொள்வார் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். 


ஏன்  என்றால்  கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வுடன் கூட்டனி வைத்தே ஒரு இடத்தில கூட ஜெயிக்காத இவர்களா தனித்து ஜெயிக்க போகி றார்கள். இந்த விஷயம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாசுக்கு நன்றா கவே தெரியும். இருந்தாலும்  தனக்கு நிறைய பவர் இருக்கிறது என்கிற சீன காட்டவே இந்த நாடகமம்   வைத்து நிறைய தொகுதிகளையும்  கரன்சி களையும் பெற திட்டமாம். அதனால் அவர்கள் பிஜேபி பக்கம் போகலாம் இல்லை காங்கிரஸ் பக்கம் கூட  சாயலாம். இதற்கு காலம்  தான் பதில் சொல்ல வேண்டும்.

dmdk கூட இதே நிலையில் தன உள்ளது. சிறிய கட்சிகள் தான் பெரிய கட்சிகளின் தயவை நாட வேண்டும். இங்கே இப்போது எல்லாமே தலைகிழாய்  மாறி விட்டது. ஒரு பெரிய கட்சி இந்த கட்சியின் ஆதரவுக்காய் காத்திருப்பது  வேதனையான  விஷயம் என்று சொன்னாலும் இவர்கள் சொல்லக்கூடிய  yes என்கிற ஒரு வார்த்தைக்காக ஒரு தலைவர் எவ்வளவு ஆர்வமுடன் காத்திருக்கிறார் தெரியுமா? 


ராஜ்யசபா mp கூட தர தயாராய் இருக்கிறார். இதை  பயன்படுத்திக் கொள்ளும்  திறமை விஜயகாந்த்துக்கு இருக்கிறதா இல்லையா  என்பது  தெரிய வில்லை?  வரும் பாராளு மன்ற தேர்தலில் இவர் கூட்டனி சேர்ந்து போட்டியிட்டா கூட  ஒரு mp ஜெயிப்பாங்க என்பதில் கூட நம்பிக்கை இல்லை. எனவே பெரியவருக்கு கை கொடுத்தா ஏதோ கடைசி காலத்துல அவர் கொஞ்சம் சந்தோசபடுவார். உங்களுக்கும் அதுவும் உங்க மச்சானுக்கு ஒரு mp  பதவி கிடைக்கும். நல்ல வாய்ப்பை நழுவ விடாதீங்க கேப்டன் சார். இதற்கு அவர் ஓகே சொன்னால் அவங்க கூட்டனி உறுதியாகிவிடும். அதனால் இவங்க ஒரு அணியாக போட்டியில் இருப்பாங்க.

இதில் எந்த ஆரவாரமும் இல்லாமல் கூட்டனி பற்றி சிறிதும் கவலைப் படாமல் பிரதமர் கனவோடு அமைதியாக காய் நகர்திக்கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா  தான். தமிழகத்தில் அவருக்கு இப்போது நேரம் நன்றாகவே இருக்கிறது. அவர் சொல்வது போல் நாளை நமதே நாற்பதும் நமதே என்பது நனவனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .


எப்படி என்று சொன்னால் எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் நான்கு முனை ஏன் 5 முனை போட்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஏன் என்று சொன்னால் இங்கு அவ்வளவு பிரிவினைகள் இருக்கின்றது. 

இதில் இப்போது  ஒருங்கிணைந்து இருப்பது அதிமுக ஒன்று மட்டும் தான். இந்த கட்சியில் இவர்களின் அணியில் தான் எவ்வித வேறுபாடும் இன்றி ஒற்றுமையான பலம் தெரிகின்றது. அனைவரும் அம்மா தான் பிரதமர் என்கிற கனவோடு உழைத்து வருவதால் தமிழகத்தில் பலமான அணியாக மட்டுமல்ல வெற்றி பெரும் நிலையிலும் இவர்களே முன்னிலையில் இருக்கிறார்கள்.   


No comments:

Post a Comment