pandianகோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு இன்று வந்த அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு பல கொள்கைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று டெரிவேட்யூ என்ற விதியாகும். இந்த கொள்கையால் வங்கி மூலம் ஏற்றுமதி செய்யும் முறையில் சுமார் ரூ.200 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது.
இதில் கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதில் பன்னாட்டு வங்கிகள் பெரும் பலனடைந்துள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் அரசும் உடந்தையாக உள்ளது.
2012–ம் ஆண்டு 11 வங்கிகள் மீது புகார் கூறப்பட்டது. இதில் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் அபராதம் விதித்துள்ளார். மோசடி வங்கிகள் குறித்து பிரதமர், மத்திய நிதி மந்திரி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்.
இந்த மெகா மோசடியை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். மேலும் மத்திய கணக்குத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டணி கூறித்து கேட்டபோது ஒத்த கருத்துள்ள அ.தி.மு.க.வுடன் எங்கள் கட்சி பாராளுமன்றத்தேர்தலை சந்திக்கும் என்றார். ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கூறி வருவது பற்றி கேட்டபோது ஜெயலிதா பல மொழிகள் தெரிந்தவர் என்பது மட்டுமல்ல அறிவாளியும் கூட. எனவே அவர் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவரே என்றா