Sunday 12 January 2014

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்



புத்தாண்டு என்று சொன்னாலே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு மதத்துக்கும், இனத்துக்கும் ஒரு புத்தாண்டு இருக்கின்றது. இருந்தாலும் இவர்கள் அனைவரும் கொண்டாடுவது ஆங்கில புத்தாண்டை தான். ஏன் என்று சொன்னால் உலகம் முழுமைக்கும் சிறப்பாக கொண்டாடும் ஒரே திருவிழா இந்த ஆங்கில புத்தாண்டு மட்டும் தான். பொதுவாக அனைவரும் பின்பற்றும் நாட்காட்டி கூட இதுவாக தானே இருக்கின்றது. அப்படி  இருக்கும் போது இதைத்தானே பின்பற்றியாக வேண்டும். அதனால் தான் மக்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை அமோககாக வரவேற்கிறார்கள். 

தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், என்று ஒவொரு மொழி பேசும் மக்களும் தங்களின் சம்பிரதாய முறைப்படி தங்களின் இனத்திற்கான மதத்திற்கான புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இருந்தாலும் இந்த ஆங்கில புத்தாண்டிற்கு இருக்கின்ற சிறப்பு அதற்கு  இருப்பதில்லை.

ஒவ்வொருவரும் இந்த ஆங்கில புத்தாண்டின் போது தான் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்கின்றனர். இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர். இந்த ஆண்டில் ஜனவரியில் இதை செய்ய வேண்டும் பெப்ரவரியில் அதை  செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு திட்டத்தை வைத்திருப்போம். ஆனால் மற்ற மத, இன காலண்டர்களில் உள்ள மாதங்களுக்கு  இவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. காரணம் அவை இந்த திட்டத்திற்குள் கால கட்டத்துக்குள் வருவதில்லை  என்பது தான். 

முன்பாவது பரவாயில்லை தமிழ் புத்தாண்டிற்கு ஒரு சிறப்பு இருந்தது. அது கூட கடந்த ஆட்சியாளர்களால்  மாற்றப்பட்டு  இப்போது கேலி கூத்தாகியுள்ளது. சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு சிலரும் தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று வேறு சிலரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படி கொண்டாடி வருவதால் தமிழர்களின் அடையாளமே  மாறிப்போயுள்ளது. 

இதற்கு  சில ஊ டகங்கலும் ஒத்து ஓதுவது  வேதனையான விஷயம். இதில் அவர்களுக்கு என்ன ஒரு லாபம் என்றால் தைத்திங்களில் வரும் தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டு என்று கொஞ்சம் வியாபாரத்தையும் சித்திரை மாதம்  வரும் தமிழ் புத்தாண்டிற்கு கொஞ்சம் விளம்பரம் வாங்கி சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் என்று போட்டு தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்கிறார்கள். மொத்தத்தில் அவர்களின் பொழப்பு நடக்கிறது. 

கலாசாரம், தொன்றுதொட்டு வருகின்ற பாரம்பரியம் எப்படி போனால் அவர்களுக்கு என்ன? பணம் வந்தால் போதும் என்கிற போக்கு தானே. எல்லாம் காசு, பணம். துட்டு, money money என்று ஆகிவிட்டால் எல்லாமே business தான்.

anyway இந்த புத்தாண்டு எல்லோருக்கும் சிறப்பாய் அமைய மற்றவர்களை  போல நானும் வாழ்த்துகின்றேன். எங்களுடைய வாழ்த்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். உங்களின் வெற்றி என்பது உங்கள் கையில் இருக்கின்றது. உங்களின் உழைப்பும் முயற்சியும் உங்களை உயரத்தில் ஏற்றி வைக்கும்.

தொடர்ந்து  முயற்சி செய்யுங்கள் முன்னேறுங்கள். எல்லா வெற்றியும் உங்களை தேடி வரும். 2014ம் வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய இனிய நல்வாழ்த்துக்கள்..... 

No comments:

Post a Comment